6 குழந்தைகளுடன் 'மின் மயானத்தில்' வசித்துவரும் 'தாய்!'.. 'விழுப்புரத்தில்' பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 22, 2020 09:13 PM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே எவ்வித பாதுகாப்பும் இன்றி பெண் ஒருவர் குழந்தைகளுடன் மயானத்தில் வசித்து வருகிறார்.

TN Mother Stays with her 6 children in Electric Cemetery

கணவர் பெங்களூரில் கூலி வேலை பார்த்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் கலத்தம்பட்டு பகுதியில் பிரமிளா ஆறு குழந்தைகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் குழந்தைகளுடன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெங்களூரில் இருக்கும் கணவர் ஊர் திரும்ப முடியாத சூழலில் இருக்க, பிரமிளா அங்கு உள்ள மயானத்தில் இருக்கும் கட்டிடத்தில் தனது 6 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

ஆதார் கார்டு,  குடும்ப அட்டை உள்ளிட்ட எதுவும் இல்லாததால் அரசின் எந்த நிவாரணப் பொருட்களையும், சலுகைகளையும், திட்டங்களையும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட பிரமிளா தனது 6 குழந்தைகளுடன் மயானத்தில் இருக்கும் கட்டத்திலேயே தங்கி இருந்ததை கண்டு காவல்துறையினர் மற்றும் அப்பகுதி எம்எல்ஏ உள்ளிட்டோர் அத்தியாவசிய பொருட்களை தந்து உதவியுள்ளனர். மேலும் தனக்கு தன் குழந்தைகளுடன் தங்குவதற்கு இருப்பிட வசதி ஏற்படுத்தித் தருமாறும் பிரமிளா கோரிக்கை விடுத்துள்ளார்.