"ஆண்கள் 30 வயதுக்குள்ள திருமணம் பண்ணனும்"!.. "பெண்கள் 35 வயதுக்குள்ள 2 குழந்தைகளுக்கு தாயாகணும்!".. 'புதிய' திட்டம் தீட்டிய 'நாடு'!.. 'ஆச்சர்யப்பட' வைக்கும் 'காரணம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்சந்ததி விருத்தி குறைவதால், மக்கள் தொகை குறைவதகவும், இதனால் பொருளாதார நிலைமை பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் உணர்ந்த வியட்நாம் அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது.

9.6 கோடி மக்கள் தொகை உள்ள வியட்நாமில் கடந்த 1980களில் இருந்தே குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணின் மகப்பேறு சராசரியாக 4 குழந்தைகளாக இருந்த நிலையில் இருந்து தற்போது சராசரியாக 2.09 ஆகக் குறைந்துள்ளது. இதில் நகர்ப்புறங்களில் ஒரு பெண்ணின் சராசரி மகப்பேறு 1.83 குழந்தையாகவும் கிராமப்புறங்களில் 2.26 ஆகவும் உள்ளது. அதைத் தவிர, நாட்டில் குறைவாகவே உள்ள படித்த இளைஞர்களும் வெளிநாட்டிற்கு சென்றுவிடுவதால், நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. இதனால் உழைப்பவர் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. எனவே ஆண்கள் 30 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், பெண்கள் 35 வயதுக்குள் 2 குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு வீடுகள் வாங்க, வாடகைக்குப் பெற, கல்விக் கட்டண சலுகைகள், பள்ளி சேர்க்கை, ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும், அத்துடன் இரு குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு வருமான வரிச் சலுகைகள், அதிகப்படியான மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் சீர்குலைந்த நாட்டின் பொருளாதார நிதி நிலையும், சீக்கிரமே திருமணம் செய்வதால் குடிமகன்களுக்கு பொறுப்பும் ஆரோக்கியமான மனநிலையும் உண்டாகும் என்பதே அரசின் திட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
