"US-ன் முக்கியமான ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த வருஷம் காணமலே போய்டும்!".. கொரோனாவால் கதறும் BOEING நிறுவன CEO!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பினால் அமெரிக்காவின் முக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனம் காணாமலே போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அமெரிக்காவில் 13 லட்சம் பேரை தாண்டி கொரோனா பாதித்ததை அடுத்து, கொரோனாவால் உண்டான உயிரிழப்பு 80 ஆயிரத்தைத் தாண்டியது. எனினும் அமெரிக்காவோ, கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறியுள்ளதோடு ஊரடங்கை தளர்த்தியும் வருகிறது. குறிப்பாக விமான போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
இதனால் அமெரிக்காவின் முக்கியமான ஏர்லைன்ஸான போயிங் ஏர்லைன்ஸ் நிறுவனம் காணமலே போய்விடும் என்றும், கொரோனா லாக்டவுன் முடிந்தாலும் கூட விமான சேவை 25 சதவீதம் என்கிற அளவு கூட இயங்காது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக போயிங் 747 மேக்ஸ் விமானங்களின் சேவை ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும் சிக்கலில் உள்ள போயிங் நிறுவனத்தின் நிலை இந்தாண்டு இறுதிக்குள் 50 சதவீதம் சீரடையலாம் என்று அந்நிறுவனத்தின் முதன்மை செயலாளர் டேவிட் கால்ஹவுன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
