'அப்பாடா' இப்பவாச்சும் தெறந்தாங்களே... 'அலைமோதும்' மக்கள் கூட்டம்... 'கல்லா' கட்டும் கடைக்காரர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சிங்கப்பூரில் சலூன் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து இருக்கிறது.
கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருப்பதால் சிங்கப்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் சலூன் கடைகள் அங்கு திறக்கப்பட்டு இருக்கின்றன.
கடைகள் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. எனினும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் காத்திருந்து முடிவெட்டி செல்கின்றனர். கொரோனா வைரஸ்க்கு அந்நாட்டில் இதுவரை 24,671 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #CORONA #CORONAVIRUS