காதலிக்காக எல்லாரும் என்னென்னமோ பண்ணுவாங்க.. ஆனா இவர் பண்ணுனது தான் ‘அல்டிமேட்’ சம்பவம்.. கையும் களவுமாக சிக்கிய ஜோடி..!
முகப்பு > செய்திகள் > உலகம்காதலிக்காக காதலன் செய்த விபரீத செயலால் இருவரையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Man disguises as girlfriend to take exams on her behalf Man disguises as girlfriend to take exams on her behalf](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/man-disguises-as-girlfriend-to-take-exams-on-her-behalf.jpg)
செனகல் நாட்டைச் சேர்ந்தவர் காதிம் எம்பூப் (Khadim Mboup). இவரது காதலி கங்கு டியூம் (Gangue Dioum). 19 வயதான கங்கு டியும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது பள்ளியில் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆனால் சரியாக படிக்காததால் தேர்வில் பெயில் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் கங்கு டியூம் இருந்துள்ளார்.
அதனால் தனது காதலிக்கு உதவ நினைத்த காதிம் எம்பூப் ஒரு ப்ளான் பண்ணியுள்ளார். அதன்படி தனது காதலி போல் பெண் வேடமிட்டு தான் தேர்வு எழுதுவது என முடிவு செய்துள்ளார். அதற்காக பெண் போல் ஆடை அணிந்து 3 நாட்களாக தேர்வு எழுதி வந்துள்ளார். இதேபோல் நான்காவது நாளும் காதிம் எம்பூப் தேர்வு எழுத சென்றுள்ளார்.
அப்போது ஆசிரியர் ஒருவர் இதனை கவனித்துள்ளார். உடனே இதுதொடர்பாக போலீசார் தகவல் கொடுத்து பள்ளிக்கு வர வழைத்துள்ளார். இதனை அடுத்து காதிம் எம்பூப்பிடம் விசாரணை மேற்கொண்டதில் காதலிக்காக இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் காதலி கங்கு டியூம் 5 வருடங்களுக்கு தேர்வு எழுத தடை விதித்து அந்நாட்டு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)