VIDEO: ஓகோ.. ‘இதுக்குதான் அடிக்கடி வெளியூர் போறாரா..!’.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. கடைசியில் 2-வது மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு பெண்களை ஒருவொருக்கொருவர் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நபரை இரண்டு மனைவிகளும் சேர்ந்து அடித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம் புபனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம். இவர் சொந்தமாக ஆழ்துளை கிணறுக்கு துளையிடும் வண்டி வைத்துள்ளார். இதனால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரும் என்பதால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் வீட்டுக்கு வர முடியாது என்று மனைவியிடம் சொல்லிவிட்டு பரசுராம் சென்று வந்துள்ளார். நாளுக்கு நாள் கணவரின் நடத்தையில் வித்தியாசம் தெரிந்ததால், மனைவிக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. ஒருகட்டத்தில் மூன்று மாதங்கள் கழித்து பரசுராம் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் வேலை விஷயமாக வெளியே செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு பரசுராம் சென்றுள்ளார். உடனே அவருக்கு தெரியாமல் பரசுராமை அவரது முதல் மனைவி பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது தெலங்கானா மாநிலம் கம்மாரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் பரசுராம் குடும்பம் நடத்திவருவது தெரியவந்துள்ளது. வேறொரு பெண்ணுடன் தனது கணவனைப் பார்த்த ஆத்திரத்தில் பரசுராமின் முதல் மனைவி, இரண்டாவது மனைவியை அடிக்கப் பாய்ந்தார்.
அப்போது, பரசுராமுக்கு ஏற்கெனவே திருமணமானது தனக்குத் தெரியாது என்று கூறி இரண்டாவது மனைவி கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து, இரண்டு மனைவிகளும் சேர்ந்து பரசுராமை கடுமையாகத் தாக்கினர். இதனிடையே அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பரசுராமை கைது செய்தனர். முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டு மனைவிகளும் பரசுராமை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Video Credits: Sakshi

மற்ற செய்திகள்
