'விதிமுறைகளை தளர்த்துறோம்...' இனிமேல் ஆன்லைன் எக்ஸாம்ல 'இதெல்லாம்' பண்ணலாம்...! - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் செமஸ்டர் தேர்வில் புத்தங்கள் மட்டும் இணையத்தில் பார்த்து தேர்வு எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்வுகளையும், தேர்வு நாட்களையும் அறிவித்து வருகின்றன.
கடந்த மாதங்களில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. அதோடு முதலில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தை விட இரண்டாம் அலை கடுமையான தாக்குதலை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
வரும் மே மாதம் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், கடந்த தேர்வில் நிறைய மாணவர்கள் ஆன்லைன் மூலமாக எழுதி தோல்வி அடைந்ததால், அண்ணா பல்கலைக்கழகம் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில், பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வில், கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது
மேலும், விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம் எனவும், தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
