'பரியேறும் பெருமாள்' படத்த பத்தின இந்த கூற்றுகளில் எது சரி? .. குரூப்-1 தேர்வில் இடம் பெற்ற அந்த ‘வைரல்’ கேள்வி இதுதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sivasankar K | Jan 03, 2021 06:06 PM

இன்று தமிழ்நாடு முழுவதும் குரூப்-1 தேர்வு நடைபெற்றது. அதில் கேட்கப்பட்டுள்ள கேள்வி ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.

question about pariyerum perumal tamil movie in Group1 Exam

ஆம், இந்த குரூப்-1 தேர்வில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர்கள் கதிர், ஆனந்தி, மாரிமுத்து, பூ.ராம் மற்றும் பலர் நடித்து 2018-ஆம் ஆண்டு வெளிவந்த "பரியேறும் பெருமாள்" திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளது.

அதில், தலை சிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ்த் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யும் என்கிற கேள்வியும், அதில் விடைக்கான ஆப்ஷன்களாக, “(a) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது, (b) இப்படம் மிகச்சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம் பேர் விருது பெற்றது, (C)இப்படம் திரு.மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு நீலம் தயாரிப்புக் குழுமத்தால் வெளியிடப்பட்டது” ஆகியவை இடம் பெற்றிருந்தன.

ALSO READ: 'சும்மா கிழி!'.. 'இதெப்டி இருக்கு?'.. ரஜினியாகவே மாறி ரகளை செய்த உலக லெவல் கிரிக்கெட் வீரர்.. இன்ஸ்டாகிராமில் பரவும் வீடியோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Question about pariyerum perumal tamil movie in Group1 Exam | Tamil Nadu News.