'கணவனை காணாமல் தேடிய மனைவி'... 'சார், கார் கண்ணாடியை கொஞ்சம் இறக்குங்க'... 'யார் கூட தோசை சாப்பிடுறீங்க'?... அல்டிமேட் ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது கொடுத்த புகார் ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த செவ்வாயன்று இஞ்சினியரான தனது கணவர், அவரின் காதலியை அங்குள்ள கோவில் ஒன்றிற்கு அழைத்துச் சென்று விட்டு, அதன் பிறகு இருவரும் சேர்ந்து காரில் வைத்தே தோசை சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது கணவரைத் தேடி தனது சகோதரருடன் அந்த பெண் திரிந்த நிலையில், கோவிலுக்கு அருகே ஒரு காருக்குள் அவரது கணவரையும், காதலியையும் பார்த்துள்ளார். கணவர் அந்த பெண்ணிற்கு தோசையை ஊட்டும் நேரம் பார்த்து கையும் களவுமாக பிடித்த நிலையில், வசமாக சிக்கிக் கொண்ட இருவரையும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது தனது கணவர் குறித்து பெண் தெரிவித்த கருத்து ஒன்று மேலும் அதிர்ச்சியை கிளப்பியது. இந்த ஒரு பெண்ணுடன் மட்டுமில்லாமல், பல்வேறு பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ள தனது கணவர், அவர்களுடன் அடிக்கடி வெளியேயும் சுற்றி, திருமணத்திற்கு புறம்பான உறவை மேற்கொண்டு வந்ததாக தனது கணவர் மீதான குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக புகார் பதிவு செய்ய காவல்துறை மறுத்துள்ளது. அதன் பின்னர், அந்த பெண்ணின் கணவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
