பெண்ணின் மொபைலிற்கு வந்த லைவ் 'வீடியோ'!!... திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'... "என் 'புருஷன்' இப்டி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல..."!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பேஸ்புக் நேரலையில் நபர் ஒருவர் ஒளிபரப்பிய வீடியோவைத் திறந்து பார்த்த பெண்ணிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அமெரிக்காவிலுள்ள குயின் என்ற பெண்ணிற்கு நேரலை வீடியோ ஒன்றை ஒருவர் அனுப்பியுள்ளார். அதனை திறந்து பார்த்த அந்த பெண் உடைந்தே போனார். அந்த வீடியோவின் ஆரம்பத்தில், ஆண் ஒருவர் ஹோட்டல் ஒன்றின் கதவைத் தட்டுகிறார். அந்த அறையின் கதவை குயினின் கணவரான ஆண்டனி திறக்கிறார்.
சட்டையில்லாமல் வெளியே வரும் ஆண்டனியுடன் வேறொரு பெண்ணும் வெளியே வருகிறார். அந்த பெண்ணின் பெயர் ஏமி. தொடக்கத்தில் இருந்து நேரலையை எடுத்துக் கொண்டே நபர் ஒருவர் கதவைத் தட்டுகிறார் அல்லவா அவரது மனைவி தான் ஏமி. குயினின் கணவர் ஆன்டனியும், வீடியோ எடுத்த நபரின் மனைவி ஏமியும் தவறான தொடர்பில் இருந்ததை அவர் தட்டிக் கேட்ட நிலையில், அவருக்கும் ஆண்டனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வீடியோ எடுத்த ஏமியின் கணவர், ஆண்டனியிடம், 'இந்த வீடியோ தற்போது நேரலையில் உள்ளது. உனது மனைவியும், பிள்ளைகளும் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் மனைவியுடன் எத்தனை நாள் உனக்கு தவறான உறவு இருந்தது?' என்றெல்லாம் அவர் ஆண்டனியுடன் கேட்டு மோதலில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குயினுக்கு கடும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், தனது கணவரின் செயலால் அவர் மிகுந்த வருத்தமடைந்தார். 'தொடக்கத்தில் ஆண்டனி என்னுடன் மிக அன்பாக இருந்தார். அவர் மீது எனக்கு அதிகம் காதலும், அன்பும் இருந்தது. ஆனால், ஆண்டனியிடம் நாட்கள் செல்ல செல்ல சில மாற்றங்களை உணர்ந்தேன். இரவு நேரங்களில் வெளியே தங்கிக் கொள்வது, மொபைல் போனை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்வது என ஆண்டனி செய்ததால் எனக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பிறகு ஆண்டனிக்கு ஏமியுடன் மட்டுமில்லாமல் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் ஏமி மூலம் தெரிய வந்துள்ளது. அவர் இப்படி செய்வார் என நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை' என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குயின் மற்றும் ஆண்டனி ஆகியோர் விவாகரத்துக்கு தயாராகி வரும் நிலையில், ஆண்டனிக்கு குயின் இரண்டாவது மனைவி ஆவார். ஆண்டனியின் முந்தைய திருமணம் மூலமுள்ள குழந்தைகள், குயினைத் தான் தாய் என அழைத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
