“தப்பு பண்ணிட்டேனே... அவசரப் பட்டுட்டனே!”.. புலம்பிய மனுசனுக்கு ‘கதவைத் தட்டி’ ஷாக் கொடுத்த ‘அதிர்ஷ்டம்’!.. ஒரு தவறால் அடித்த ‘டபுள் ஜாக்பாட்!’
முகப்பு > செய்திகள் > உலகம்லாட்டரியும் அதிர்ஷ்டமும் சேர்ந்தே இருப்பவை என்று சொல்லலாம். இருப்பினும், ஒரு மோசமான தவறை செய்யும்போது எதிர்பாராத விதமாக நேர்மறையான விளைவு ஒன்று உருவாவது ஆச்சரியம்தானே? அதுவும் அதிர்ஷ்டம்தானே? அப்படி ஒரு அதிர்ஷ்டம்தான், ஒருவருக்கு நடந்தது. அவர்தான் மிச்சிகனில் சமீர் மசாஹெம். இந்த மனிதருக்கு கிடைத்தது, ஒன்று அல்ல, ஆனால் இரட்டை ஜாக்பாட்! அவர் தற்செயலாக இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கினார், அங்கு ஒவ்வொன்றும் 1 மில்லியன் டாலர் வென்ற பணத்தை வைத்திருந்தன.
மசாஹேம் இந்த தவறை சிறிது நேரம் உணரவில்லை. அவர் ஒரு லாட்டரி ஆப்பிலிருந்து 2 டிக்கெட்டை வாங்கியிருந்தார். அவர் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கியதே அவருக்குத் தெரியாது. ஆனால் அந்த ஆப்பிற்குள் உள்நுழைந்தபோது தான் தான் தவறுதலாக 2 லாட்டரிகளை வாங்கியிருப்பதை உணர்ந்தார். ஆனால் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த இரண்டுக்கும் அவருக்கு 2 மில்லியன் டாலர்கள் பரிசு கிடைத்துள்ளன.
இதுகுறித்து பேசிய மசாஹெம், “தவறுதலாக 2 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியதை உணர்ந்தபின்னும் ஒரு திகைப்பு இருந்தது. ஆனால் இரண்டு முறை ஜாக்பாட்டை வென்றபோது, இது நிஜம் என்று என்னால் நம்ப முடியவில்லை. எனது தவறு $ 2 மில்லியனை சம்பாதித்து கொடுத்த உண்மையை உணர பல நாட்கள் ஆகும்” என்று கூறினார். இந்த பரிசுத் தொகையை அவர் என்ன செய்வார் என்று கேட்டபோது, சிலவற்றை சேவிங்ஸில் போட்டு வைப்பதாகவும், மீதமுள்ள பணத்துக்கு ஒரு வீட்டை வாங்குவதாகவும் மசாஹெம் கூறினார்.
லாட்டரி என்று வரும்போது இதுபோன்ற வினோதமான மற்றும் அதிர்ஷ்டமான நிகழ்வுகள் அரிதானவை அல்ல. புளோரிடாவில் ஒரு பெண் தனது லாட்டரி சீட்டைப் பெறவில்லை, அதோடு அவர் 1000 டாலர் வென்றார். அவர் வென்ற பணத்தை முதலில் அவர் இழக்க நேரிட்டது, ஆனால் டிக்கெட் அஞ்சலில் வந்ததும், அவரால் பரிசை பெற முடிந்தது. இதேபோல் இன்னொரு மனிதர் 25 முறை லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார், இந்த முயற்சிகள் அனைத்திலும், அவரால் ஒரு பெரிய தொகையை வெல்ல முடிந்தது.