'நிர்வாணமாக' சைக்கிளில் சுற்றிய 'இளம்பெண்'... "எதுக்கு இதெல்லாம் பண்றீங்க??..." அவரே சொன்ன மனதை 'சுக்கு' நூறாக்கும் 'காரணம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனின் லண்டன் பகுதியை சேர்ந்த இளம்பெண் கெர்ரி பார்னஸ் (Kerri Barnes). இவர் தற்கொலையை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, நிர்வாணமாக சைக்கிளில் சவாரி செய்து வருகிறார்.

கெர்ரி பார்னஸின் உறவினர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செயல் கெர்ரியை அதிகம் பாதித்துள்ளது. அதே போல, சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கின் போதும் கெர்ரிக்கு நெருங்கிய ஒருவர் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இதன் காரணமாக, கெர்ரி மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?. அப்படி என்ன பிரச்சனை என பல கேள்விகள், கெர்ரியை அதிகம் வாட்டியுள்ளது. தற்கொலைகள் அதிகம் நடப்பதை குறைக்க எண்ணிய கெர்ரி, தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக நிதி திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதற்கான முயற்சிகள் ஆரம்பத்தில் பெரியளவில் கெர்ரிக்கு வெற்றியைத் தரவில்லை. இதனால் எப்படி நிதி திரட்டுவது என யோசித்த கெர்ரிக்கு நண்பர் ஒரு விளையாட்டாக சொன்ன ஐடியா சரியென பட்டுள்ளது. இதனையடுத்து, சைக்கிளில் நிர்வாணமாக லண்டன் பகுதியை வலம் வர முடிவு செய்துள்ளார்.
இதன்படி, தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு குறித்த பதாகைகளுடன் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தமுறை, கெர்ரிக்கு பெரிய அளவில் நிதி சேர்ந்துள்ளது. இதுகுறித்து பேசிய கெர்ரி, 'தற்கொலைகளை தடுக்க வேண்டும் என நினைத்து தான் இப்படி நிதி திரட்ட முடிவு செய்தேன். இதன் மூலம் கிடைத்த நிதியால் தற்கொலைகள் சிறிய அளவில் குறைந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்' என அவர் தெரிவித்துள்ளார். கெர்ரியின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
