'அப்படியே டபுள் ஆகும் நோய்த்தொற்று'! .. 'இந்த' வயசுக்காரர்களில் 92% பேரை குறிவைக்கும் 'கொரோனா'! கதிகலங்கும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் கொரோனா கட்டுக்கு மீறிப் போவதாக பிரிட்டன் மருத்துவ ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது கொரோனா நோய்தொற்று. இதனால் நடுத்தர வயதினர் அதிகம் பாதிப்பதாகவும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டோரில் 92 சதவீதம் பேர் ஒரே வாரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், கடந்த வாரம் மட்டும் 50 வயதுகளில் உள்ளவர்கள் 72 சதவீதத்தினருக்கும், 60 வயதுகளில் உள்ளவர்களில் 72 சதவீதத்தினருக்கும், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 44 சதவீதத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இந்த புள்ளிவிவரங்கள் கவலை தருவதாகவும் இங்கிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி கடந்த வாரம் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருபவர்களில் 60 முதல் 75 வயதுக்காரர்கள் முன்பை விட 20 சதவீதம் பேரும், இதேபோல் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 67% பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிகரித்துள்ளது. மேலும் 75 முதல் 84 வயது உள்ளவர்கள் 72% பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் இரட்டிப்பாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.