“யாராச்சும் தாய்மொழியில் பேசுனா தெறிச்சு ஓடும் பெண்!”.. காரணம் ‘பிரிட்டிஷ் வரலாற்றில்’ முதல் முதலில் ‘இதை செஞ்சதுதான்!’
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனைச் சேர்ந்த 36 வயது பெக்காள் மெஹ்மூத் என்கிற பெண் தன் தாய் மொழியை பேசுகிறவர்களைக் கண்டாலே பயந்து ஓடுவதாக தெரிவித்துள்ளார். காரணம் தான் யாரென்று தெரியவந்தால் அது தன் உயிருக்கு ஆபத்து என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடையில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும்போதும் கூட யாராவது தன் தாய்மொழியில் பேசினால் கூட, எந்த பொருட்களையும் வாங்காமல், உடனே அங்கிருந்து வெளியேறுகிறார். பேருந்தில் அப்படி யாரேனும் தன் தாய் மொழியில் பேசினால், அப்படியே பேருந்தில் இருந்து இறங்கி விடுவதாகவும், காபி ஷாப்பில் யாரையாவது இப்படி பார்த்தால், அமைதியாக அங்கிருந்து நகர்ந்துவிடுவதாகவும் கூறுகிறார்.
13 ஆண்டுகளாக போலீஸாரின் பாதுகாப்பில் வாழ்ந்து வரும் இவரது, தங்கை பனாஸ் என்பவர் அவரது 20வது வயதில் வீட்டின் கட்டாயத் திருமணத்தில் இருந்து தப்பியோடியபோது ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் காதல் கொண்டார்.
இந்த விஷயம் வீட்டுக்கு தெரியவந்ததும் தந்தையும் மாமாவும் சேர்ந்து பனாஸை கௌரவக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்தனர். இந்த விவகாரத்தில் தனது தந்தை மற்றும் மாமாவுக்கு எதிராக பெக்காள் மெஹ்மூத் சொன்னதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
பிரிட்டன் வரலாற்றிலேயே கௌரவக் கொலைக்கு எதிராக தன் குடும்பத்தையே எதிர்த்து சாட்சி சொன்ன முதல் பெண்ணாக கருதப்படும் பெக்காள் மெஹ்மூத் தற்போது வேறு பெயரில் தலைமறைவாக இருப்பதுடன், தனது தந்தை விடுதலை ஆகும் நாளை எண்ணி பயத்துடன் இருப்பதாக கூறியுள்ளார். இந்த செய்தியில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் பெக்காள் மெஹ்மூத்தின் இறந்துபோன தங்கை பனாஸ் மற்றும் சிறையில் இருக்கும் அவரது தந்தை மஹ்மத் பாபாக்கிர் ஆகிய இருவரின் புகைப்படங்களாகும்.