10 வருசத்துக்கு முன்னாடி பறிபோன ஒரு ‘கை’.. இப்போ கேரளாவின் பேசுபொருளே இவங்கதான்.. வெளியான உருக்கமான பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கரை சேர்ந்த பெண் கேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிக அளவில் பெண்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஜோதி என்ற பெண் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தன்டேவாடா பகுதியை ஜோதி கேரளாவை சேர்ந்த ராணுவ வீரரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு பேருந்து ஒன்றில் ஜோதி பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன் இருக்கையில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் டேங்கர் லாரி ஒன்று ராணுவ வீரர் இருந்த இருக்கையை நோக்கி மோத வந்துள்ளது. இதைக் கவனித்த ஜோதி சற்றும் தயங்காமல் அவரை இழுத்து காப்பற்றியுள்ளார். இந்த முயற்சியில் எதிர்பாரதவிதமாக ஜோதியின் வலது கை பறிபோனது.
இந்த சம்பவம் அப்போது பெரும் சத்தீஸ்கரில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சமயத்தில் கேரளாவை சேர்ந்த விகாஷ் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்துள்ள பைலாடியா பகுதியில் சிஆர்பிஎப் வீரராக பணியாற்றி வந்துள்ளார். ஜோதியின் துணிச்சலான செயலால் கவரப்பட்ட விகாஷ், அவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு கோவை விமான நிலையத்துக்கு விகாஷ் மாற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது மனைவியுடன் விகாஷ் கேரளாவின் பாலக்காட்டில் குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில் கேரள உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தனது கணவரின் சொந்த ஊரான பாலத்துளியில் பாஜக கட்சி சார்பாக கவுன்சிலர் பதவிக்கு ஜோதி போட்டியிடுகிறார். ஜோதியின் பின்னணியை கேள்விபட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்கு செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
News Credits: manorama