‘எங்க டூர் போகலாம்?’.. மொத்த விடுகதையையும் ‘முயற்சி பண்ணி’ பாத்தா.. கடைசியில வெச்ச ‘ட்விஸ்ட்!’.. வைரல் ஆகும் ஆனந்த் மஹிந்த்ரா ட்வீட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, அவ்வப்போது ட்விட்டர் மூலம் கவனம் ஈர்த்துவரும் நிலையில், அவர் பகிர்ந்த விடுகதை ஒன்று ட்விடட்ரில் வைரலாகி வருகிறது.

மார்ச் 2020 முதல் இப்போதுவரை உலகின் ஏதாவது ஒரு பகுதியில் லாக்டவுன் இருந்துகொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ், உலகையே புரட்டிப் போட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் கூட ஆளரவிமில்லாமல் இருக்கிறது. படிப்படியாக தளர்வுகள் வந்தாலும், அது வழக்கம்போல் இயல்பாக இருப்பதற்கு அல்ல என்பது பலருக்கு புரியாமல் இருக்கும் நிலையில், அரசாங்கம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஒரு கணித விளையாட்டு. அடுத்த பயண இலக்கைக் கண்டுகொள்ளுங்கள் எனும் தலைப்பில் இடதுபுறம் சில அறிவுரைகள் மற்றும் வலதுபுறம் 15 நாடுகளின் பெயர்களுடன் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்த்ரா. அதன்படி, இடதுபுற அறிவுரைப்படி முதற்படியாக 1-ல் இருந்து 9-க்குள் ஒரு எண்ணை நினைத்துகொண்டு, அதை 3-ஆல் பெருக்கி, கிடைக்கும் எண்ணுடன் 3-ஐ கூட்டினால் வரும் இரண்டு இலக்க எண்கள் இரண்டையும் மீண்டும் கூட்ட வேண்டும்.
வலதுபுற பட்டியலில் அந்த எண்ணுக்கு எதிராக என்ன எழுதியிருக்கிறதோ அங்கு பயணப்பட வேண்டும். இத்துடன் கேம் ஓவர். ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட். எந்த எண்ணை மனதில் நினைத்துக் கொண்டு இந்த கணக்கை போட்டாலும் விடை Stay at home (வீட்டிலேயே இருங்கள்) என்றே வரும். வீட்டிலேயே இருப்பதைவ் வலியுறுத்தும் ஆனந்த மஹிந்த்ராவின் இந்த விளையாட்டான விடுகதை வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
