“இதெல்லாம் என் வேகத்தை குறைச்சுடுமா என்ன?”.. 150 குழந்தைகளைக் கடந்து.. லாக்டவுனிலும் தளராத ‘தாராள பிரபு’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 01, 2020 11:35 AM

ஏற்கனவே 150 குழந்தைகளைப் பெற்றதற்காக பிரபலமான அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விந்து நன்கொடையாளர், இந்த லாக்டவுன் காலகட்டத்திலும் மேலும் 6 குழந்தைகளை பெற்றிருப்பதால் இன்னும் வைரலாகியுள்ளார்.

lockdown didnt slowed down 150 kids donor fathers 6 more

ஜோ டோனர் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த நபர், இந்த லாக்டவுன் காலகட்டத்திலும் தன்னை பிஸியாக வைத்திருப்பதால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் எல்லாம் தன்னை தொய்வடையவைத்துவிடவில்லை என்று கூறியுள்ளார். 

தற்போது ஐந்து பெண்கள் தற்போது இவரது குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள்.  ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குழந்தை பிரசவித்தார். ஆனால் எல்லா பிரசவங்களும் குறித்த நேரத்தில் நடந்திருந்தால், 2020 ஆம் ஆண்டில் ஜோ 10 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பார் என்கின்றனர். அமெரிக்காவின் வெர்மான்ட் நகரைச் சேர்ந்த 49 வயதான இவர், அர்ஜென்டினாவில் லாக்டவுனின் பெரும்பகுதியைக் கழித்துள்ளார். ஆனால் இப்போது அவர் மீண்டும் லண்டனில் இருக்கிறார், அங்கு அவர் ஐந்து பெண்களை சந்திக்க உள்ளார் என்று மிரர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

lockdown didnt slowed down 150 kids donor fathers 6 more

இதுபற்றி பேசிய ஜோ, "எனக்கு உலகளவில் சுமார் 150 குழந்தைகள் உள்ளனர், ஆனால் தற்போது என் குழந்தைகளை சுமந்துகொண்டு ஐந்து பெண்கள் கர்ப்பமாக உள்ளனர், ஏற்கனவே ஒருவர் பிரசவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் என்னை தொய்வடைய வைத்துவிடவில்லை, முன்பை விட பரபரப்பாக உணர்கிறேன். குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் புகைப்படங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களில் நிறைய பேர் என்னைப் போலவே இருக்கிறார்கள்”, என்றார் ஜோ. பேஸ்புக் பரிந்துரைகள் காரணமாக, மார்ச் முதல் ஜோ தன்னை பிஸியாக வைத்திருக்க முடிந்தாக கூறூகிறார்.

சுவாரஸ்யமாக, செயற்கை கருவூட்டல் மற்றும் உடலுறவு சேவைகளை வழங்குவதால், இவரின் குழந்தைகளை சுமந்த பலரது கர்ப்பங்களுக்கு காரணம் செயற்கைக் கருவூட்டலால் அன்றி பாலியல் உறவால்தான் என ஜோ கூ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lockdown didnt slowed down 150 kids donor fathers 6 more | World News.