‘தேசிய அளவில் பதக்கம் வென்ற’.. ‘நீச்சல் வீராங்கனைக்கு நடந்த பயங்கரம்’.. ‘வீடியோ வெளியானதால் சிக்கிய பயிற்சியாளர்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 06, 2019 11:01 AM

நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் தேசிய அளவில் பதக்கம் வென்ற 15 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Goa swimming coach booked for raping 15 YO champ Shocking Video

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளராக சுராஜித் கங்குலி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த தேசிய அளவில் பதக்கம் வென்ற 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமையை கூறுவது பதிவாகியுள்ளது. 

இந்த விவகாரம் உடனடியாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் பயிற்சியாளர் சுராஜித் கங்குலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள சுராஜித்தை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதற்கிடையே கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

Tags : #GOA #SWIMMING #NATIONALCHAMPION #COACH #SEXUALABUSE #SHOCKINGVIDEO #VIRAL