விலங்குகளையும் அச்சுறுத்தும் கொரோனா!.. 4 புலிகள், 3 சிங்கங்களுக்கு தொற்று உறுதி!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 23, 2020 03:41 PM

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு மனிதர்கள் மட்டுமல்லாது தற்போது விலங்குகளும் பாதிப்படைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

lions and tigers test positive for covid19 in new york

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் நியூயார்க் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. நியூயார்க்கில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நியூயார்க்கில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது அங்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, நியூயார்க் விலங்கு சரணாலயம் ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் மற்றும் புலிகள் இயல்பாக இருப்பதாகவும், உணவு நன்றாக உண்பதாகவும் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மனிதர்கள் மூலம் விலங்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரான்ஸ் வனஉயிரினப் பூங்காவில் சிங்கம், புலிக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.