'பலி எண்ணிகைய மட்டும் பாத்தா போதுமா!?'.. அசரவைத்த கொரோனா தரவுகள்!.. இந்திய மருத்துவ கவுன்சில் பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 23, 2020 12:09 PM

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குணமடையும் விகிதம் 20% அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

icmr says indias covid19 recovery rate rises to 20 percent

கொரோனாவுக்கு 21, 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20971 பேர் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களின் தரவுகளின் படி, பலி எண்ணிக்கை 683. பாதிக்கப்பட்ட 21,324 கேஸ்களில் 16,493 ஆக்டிவ் கேஸ்கள் ஆகும். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 5,649 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் 2,407 நபர்களும், டெல்லியில் 2248 நபர்களும் கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் 3,959 நோயாளிகள் குணமடைந்ததன் மூலம் குணமடையும் விகிதம் தோராயமாக 20% முன்னேற்றம் கண்டுள்ளது. மாநிலங்களிலிருந்து சாம்பிள்களைச் சேகரித்து ரேபிட் கிட் கருவி சோதனையின் பயன்கள் மற்றும் வீச்சு குறித்து மதிப்பிடப்போவதாக ஐசிஎம்ஆர் உறுதியளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, "சுகாதார ஊழியர்களின் திறமையும் சேவையும் மற்ற தொழில்பூர்வ ஊழியர்களை விடவும் ஒரு தனித்துவமான இடத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மனித வளம் உள்ளிட்ட பலதரப்பட்ட அளவுகோல்களைக் கையாண்டு ஊழியர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான உரிய நேர ஊதியம், திறன் வளர்ப்புப் பயிற்சிகள், உளவியல் ஆதரவு, ஆயுள் காப்பீடு ஆகியவற்றை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரேபிட் கிட் கருவி மூலம் சோதனை பெரும்பாலும் கண்காணிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுவதாகும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.