'அடுத்து' காத்திருக்கும் 'பேராபத்து'... 'ஆய்வுக்குழு' வெளியிட்டுள்ள தகவலால்... 'கலக்கத்தில்' உள்ள நாடு...
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பானில் விரைவில் பெரிய அளவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என அந்நாட்டு ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் அரசின் ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள செய்தியில், "ஜப்பானின் வடக்குப் பகுதியில் சுனாமி ஏற்படுவது உறுதி. 9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் 30 மீட்டர் உயரத்திற்கு சுனாமி ஏற்படும். பசிபிக் கடற்கரையையொட்டி இந்த பாதிப்பு உணரப்படும். கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி டோக்கியோவுக்கு தென் பகுதியில் பசிபிக் கடலில் இருக்கும் அகாஸ்வாரா தீவுக்கு தெற்கே பெரிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அடுத்து இந்த நிலநடுக்கம் ஜப்பான் டிரெஞ்ச் பகுதியில் உருவாகும். ஷிசிமா டிரெஞ்ச் பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் சுனாமி ஏற்படலாம். அப்போது கடல் அலைகள் 90 அடிக்கு உயரும்" எனக் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கு 2011 மார்ச் 11ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு மட்டும் 15,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆய்வுக் குழு கூறியுள்ள தகவல் ஜப்பான் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
