உங்க 'சகவாசமே' வேணாம்... 'அந்த' நாட்டிலிருந்து 'மொத்தமாக' வெளியேறும் 1000 நிறுவனங்கள்?... 'இந்தியாவுக்கு' அடிக்கப்போகும் ராஜயோகம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனாவில் இருந்து மீண்டிருக்கும் சீனா தற்போது மற்ற நாடுகளின் நிறுவனங்களை வாங்கிட துடியாய் துடித்து வருகிறது. இதனால் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டில் அந்நிய முதலீடு தொடர்பான விதிகளை மிகவும் கடுமையாக்கி உள்ளன.

இந்த நிலையில் பிற நாடுகளின் நிறுவனங்களை வாங்கத்துடிக்கும் சீனாவில் இருந்து மொத்தமாக 1000 நிறுவனங்கள் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அவை இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிசினஸ் டுடே நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் 300 நிறுவனங்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனவாம். ஜவுளி, மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் இதில் அடக்கமாம்.
சீனாவுக்கு மாற்றாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா நாடுகள் இந்தியாவை நினைப்பதால், அங்கிருந்து தங்களது நிறுவனங்களை வெளியேற்றி இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு மத்திய அரசு கார்ப்பரேட் வரிவிகிதத்தினை 25.17% சதவீதமாக குறைத்தது. இது தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விஷயமாக மாறியுள்ளது.
மறுபுறம் கொரோனாவுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார். மேலும் சீனாவில் இருந்து தங்களது நிறுவனங்களை வெளியேற்ற ஜப்பான் 2 பில்லியன் டாலர்களை நிதியாக அறிவித்துள்ளது என்று கூறப்படுகிறது. சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய நாடு என்பதாலும், உள்நாட்டு சந்தை வலுவாக இருப்பதாலும் இந்தியாவில் அமெரிக்கா, ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு உள்நாட்டு சந்தை, ஏற்றுமதி இரண்டுக்குமே இந்தியா உகந்த நாடு என்பது தான் பிற நாடுகளின் பார்வை இந்தியா மீது விழக்காரணம். அதனால் கொரோனா முடிந்ததும் இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய ராஜயோகம் காத்திருக்கிறது என்று நம்பலாம்!
