Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top

இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான ரகசிய தீவில் இருக்கும் சொகுசு வீடு.. கடலுக்கு நடுவுல இவ்வளவு வசதிகளா.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Sep 23, 2022 04:54 PM

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசுக்கு சொந்தமான தீவில் இருக்கும் சொகுசு வீடு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தற்போது இங்கே தங்க பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

King Charles holiday cottage on remote UK island

Also Read | தாக்குதல் தீவிரமடைந்த நேரம்.. நைட் 12.30 மணிக்கு போன் செஞ்சு பிரதமர் சொன்ன விஷயம்.. வைரலாகும் அமைச்சர் பேசும் வீடியோ..!

சுற்றுலா

சுற்றுலா செல்வதை விரும்பாத ஆட்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றி கடல், நடுவே குட்டி தீவில் வாசிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? அதுவும் அரசருக்காக கட்டப்பட்ட சொகுசு வீட்டில் தங்குவது என்றால்? ஆமாம் உண்மையாகவே அப்படியான ஒரு இடம் பிரிட்டனில் இருக்கிறது. மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் மூன்றாம் சார்லஸ். தற்போதைய இங்கிலாந்து அரசரான இவருக்கு மிகவும் பிடித்த இடம் இதுதானாம். வானை விஞ்சும் மாளிகைகள் பல அரசரின் வசம் இருந்தாலும் தன்னந்தனி தீவில் இருக்கும் இந்த சிறிய வீடு சார்லசுக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கிறது.

King Charles holiday cottage on remote UK island

வீடு

தன்னுடைய முன்னாள் மனைவி மறைந்த இளவரசி டயானாவுடன் சார்லஸ் இங்கே தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. மேலும், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பல சந்தர்ப்பங்களில் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டமரிஸ்க் ஹவுஸ், கார்ன்வால் கடற்கரையிலிருந்து 28 மைல் தொலைவில் உள்ள ட்ரெஸ்கோ தீவில் அமைந்திருக்கிறது. இந்த வீடு 1960 களில் கட்டப்பட்டிருக்கிறது.

King Charles holiday cottage on remote UK island

அரச குடும்பத்தாரின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, நான்கு படுக்கையறைகள் கொண்ட இந்த வீடு, மரங்கள் அடர்ந்த பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. கீழே இரண்டு படுக்கையறையும், மேலே இரு படுக்கைறையையும் கொண்டுள்ள இந்த வீட்டில் ஏராளமான வசதிகள் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தீவில் 150 பேர் வசிக்கின்றனர். இதன் உரிமையாளராக அரசர் இருந்த போதிலும் அவரது நண்பர்களான ராபர்ட் டோரியன்-ஸ்மித் மற்றும் அவரது மனைவி லூசி ஆகியோர் இந்த வீட்டின் பாதுகாவலராக உள்ளனர்.

King Charles holiday cottage on remote UK island

முன்பதிவு

வைஃபை, ஹை-ஃபை, ஸ்மார்ட் டிவிகள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சமையலறை ஆகியவற்றைக் கொண்ட இந்த காட்டேஜ், நீங்கள் பார்வையிடும் நேரத்தைப் பொறுத்து, ஏழு இரவுகள் தங்குவதற்கு £1,315 முதல் £5,295 வரை விலையில், பொதுமக்களுக்கு முன்பதிவு செய்யக் கிடைக்கிறது.

Also Read | சவூதி அரேபியாவுக்கு அடிச்ச அடுத்த ஜாக்பாட்.. இனி சொர்க்க பூமிதான்.. வெளியான திகைக்க வைக்கும் தகவல்கள்..!

Tags : #KING CHARLES HOLIDAY COTTAGE #UK #UK ISLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. King Charles holiday cottage on remote UK island | World News.