குளிர் தேசத்தில் வரலாறு காணாத வெயில்.. சாலையில் உருகி ஓடும் தார்.. சமாளிக்க முடியாமல் திணறும் மக்கள்.. வைரல் புகைப்படங்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 21, 2022 11:00 AM

வரலாறு காணாத வெப்பநிலை உயர்வால் பிரிட்டன் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

UK heatwave melts entire street black goo

Also Read | 11 வருஷமா கஷ்டப்பட்டு தனியாளா உருவாக்கிய கார்.. "யாருமே உதவி பண்ணலன்னு ஃபீல் பண்ணப்போ".. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த செம ஆஃபர்

பொதுவாகவே ஐக்கிய ராஜ்ஜியம் குளிர் நிறைந்த பிரதேசம். கோடை காலங்களில் கூட சராசரி வெப்பநிலையை அங்கு பதிவாகும். ஆனால், இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. சில மத்திய கிழக்கு நாடுகளை விட அதிகமான வெப்பம் பிரிட்டனில் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் அசாதாரண சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை தொட்டுள்ளது. ஜூலை நடுப்பகுதியில் லண்டனில் வெப்பநிலை பொதுவாக 21 டிகிரி செல்சியஸ் (70 F) இருக்கும். ஆனால் இந்த கோடையில் வெப்பநிலை 38C வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

UK heatwave melts entire street black goo

உருகி வழிந்த தார்

பிரிட்டனின் ஸ்டாக்போர்ட்.பகுதியில் சாலைகளில் தார் உருகி வழிகிறது. மொத்த சாலையிலும் கருப்பு நிறத்தில் தார் உருகி ஜொலிக்கிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கும்படி அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதனை சரிசெய்ய, சாலை பராமரிப்பு பணியாளர்கள் முயன்று வருகின்றனர்.

இது ஒருபுறம் என்றால், கிழக்கு லண்டனுக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் வெப்பநிலை உயர்வு காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சில வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல், ரயில்வே பாதைகளும் இதனால் சேதமடைந்திருக்கின்றன.

UK heatwave melts entire street black goo

காத்திருப்பு

இதனால் குறிப்பிட்ட சில வழிகளில் போக்குவரத்தை நிறுத்தியிருக்கிறது ரயில்வே நிர்வாகம். இதன் காரணமாக ரயில்வே நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் பேசுகையில், பாதைகள் சீராகும் வரை பொதுமக்கள் ரயில்வே நிலையங்களுக்கு வரவேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் எச்சரிக்கை பலவும் வெப்பநிலை காரணமாக உருகியது, இன்னும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

UK heatwave melts entire street black goo

மேலும், வெப்பநிலையால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க பொது குளியறைகள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் அதிரடி தள்ளுபடிகளையும் உள்ளூர் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. எப்போதும் குளிர் நிரம்பிய பிரதேசமான பிரிட்டன் தனது வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெப்பநிலையை சந்தித்து வருவது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஒரே நாளில் திடீரென ட்ரெண்ட் ஆன பன்னீர் பட்டர் மசாலா.. ட்விட்டர் முழுக்க இதான் பேச்சு..!

Tags : #UK #BLACK GOO #UK HEATWAVE MELTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UK heatwave melts entire street black goo | World News.