"கொஞ்ச நேரத்துக்கு கனவுன்னு தான் நெனச்சேன்.." வயித்து வலின்னு கழிவறை போன இளம்பெண்.. "ஆனா, உள்ள நடந்ததே வேற.."
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் உள்ள கல்லூரி மாணவி, வயிற்று வலி என கழிவறைக்கு சென்ற நிலையில், அங்கே நடந்த சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | சீறி ஓடிய காட்டாற்று வெள்ளம்.. சிக்கியவர்களை நீரில் குதித்து காப்பாற்றி ஹீரோவான வாலிபர்.. இதயம் வென்ற வீடியோ
இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவில் ஜெஸ் டேவிஸ் என்ற மாணவி பயின்று வருகிறார்.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த போது, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீவிரமான வயிற்று வலி
ஆரம்பத்தில், இதனை தனது மாதவிடாயின் ஆரம்பம் என கருதிக் கொண்ட ஜெஸ் டேவிஸ், வயிற்று வலியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், வலியின் தீவிரம் குறையாமல் கூடிக் கொண்டே இருக்க, ஜெஸ் டேவிஸ் மூலம் எழுந்து நடக்கவும், படுக்கையில் படுக்கக் கூட முடியாமலும் அவர் அவதிப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மறுநாள் தனது பிறந்த நாள் என்பதால் குளித்து விட்டு, இரவு விருந்துக்கு செல்ல டேவிஸ் தயாராக சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், அவரது வயிற்று வலி நிலையும் சற்று மோசமாக இருக்கவே, கழிவறைக்கு செல்ல வேண்டுமென ஜெஸிற்கு தோன்றி உள்ளது.
கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி
இதன் பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு கழிவறைக்கு சென்ற ஜெஸ் டேவிஸ்ஸிற்கு, கழிவறையில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம், அவருக்கே பேரதிர்ச்சியாக வந்து சேர்ந்துள்ளது. இது தொடர்பாக பேசும் டேவிஸ், தனக்கு குழந்தை பிறந்தது நிஜம் என்பதை உணரவே நிறைய நேரம் எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல, தனக்கு வெளிப்படையான கர்ப்ப அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், மாதவிடாய் சுழற்சி தனக்கு எப்போதுமே ஒழுங்கில்லாத முறையில் வருவதால் அதன் வலியாக இருக்கும் என தான் கருதியதாகவும் ஜெஸ் கூறியுள்ளார். மேலும், குழந்தை வெளியே வரும் போது, அது என்னவென்று அறிந்த நேரமும், குழந்தை அழுத நேரமும் சரியாக இருந்ததாகவும் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
நலமுடன் இருக்கும் குழந்தை
இதனைத் தொடர்ந்து, தனது நண்பருக்கு அழைத்து பேசிய ஜெஸ் டேவிஸ், நடந்த விவரங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். அவரும் உடனடியாக ஆம்புலன்ஸ்ஸிற்கு அழைக்குமாறு அறிவுறுத்த, கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெஸ் டேவிஸ். சுமார் மூன்று கிலோ எடை கொண்ட அந்த ஆண் குழந்தை, இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல 35 வார காலத்தில், ஜஸ்டிஸ் குழந்தை பெற்றதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரும் நலமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றது.
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண், கழிவறைக்கு சென்ற போது குழந்தை பிறந்துள்ள சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Also Read | "ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்.." தனக்குத் தானே கட் அவுட்.. ஏரியா முழுக்க வைரலான மாணவன்.. சுவாரஸ்ய பின்னணி

மற்ற செய்திகள்
