‘அது எப்படி தப்போ.. அதே மாதிரிதான் இதுவும்’.. வழுக்கையை கிண்டல் செய்த உயரதிகாரி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊழியரின் வழுக்கையை கிண்டல் செய்த உயரதிகாரியின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் யார்க்ஷயர் (Yorkshire) நகரில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் டோனி ஃபின் என்பவர் எலக்ட்ரிசியனாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தின் அவர் 24 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் டோனி ஃபின்னின் வழுக்கையை கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு தான் நியாயமற்ற முறையில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தொழிலாளர் தீா்ப்பாயத்தில் டோனி ஃபின் முறையிட்டிருந்தாா்.
இந்த வழக்கை 3 பேர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், இந்த அவமதிப்பு என்பது உரிமை கோருவோரின் கண்ணியத்துக்கு எதிரானது என கூறினர். மேலும், பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது எப்படி பாலியல் குற்றமோ அதே போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும் என தெரிவித்தனர்.
அப்போது தீர்ப்பாயத்தின் 3 உறுப்பினர்களும், முடி உதிர்தல் குறித்த தங்களது சொந்த அனுபவத்தைக் குறிப்பிட்டு, பெண்களை விட ஆண்களுக்கு வழுக்கை அதிகமாக இருப்பதாகக் கூறினர். மேலும் ‘வழுக்கை’ (Bald) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ‘பாலினத்தின் பாதுகாக்கப்பட்ட பண்பு’ தொடர்பான அவமதிப்பு என்று தெரிவித்தனர். 1995-ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு ஒன்றை குறிப்பிட்டு ஆண் ஒருவரை வழுக்கை என குறிப்பிடுவது என்பது, பெண்ணின் மார்பகம் குறித்து விமர்சிப்பது போன்றது அதனால், டோனி ஃபின்னுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8