"சுத்தி 128 பிளாட்'ல இவரு தான் ஒரே ஆளு.." தனியாக வாழும் முதியவர்.. "இப்போ பேய் நகரம் மாதிரி இருக்காம்.."
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்தில், 66 வயது முதியவர் ஒருவர், ஒரு தெருவிலேயே தனியாக வசித்து வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Also Read | இந்தியா, பாகிஸ்தான் கொடிகளுடன் நின்ற தோழிகள்.. மெய்சிலிர்க்க வைக்கும் 'பின்னணி'!!
ஸ்காட்லாந்தின் விசாவ்வை அடுத்த ஸ்டான்ஹோப் என்னும் பகுதியை சேர்ந்தவர் Nick Wisniewski. ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், வசித்து வரும் பகுதியை சுற்றி உள்ள 128 குடியிருப்புகளில், ஒருவரும் இல்லை என கூறப்படுகிறது.
அப்படி இருந்தும், அப்பகுதியில் தனியாக Nick வசித்து வருகிறார். அப்பகுதியில் சுமார் 200 குடும்பங்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு அங்கிருந்து வெளியேறி விட்டனர். அப்படி இருந்த போதும், சுமார் 7 மாதங்களுக்கு மேலாக, அப்பகுதியில் தனியாக வாழுந்து வருகிறார் Nick.
நிக் தங்கி வரும் மொத்த குடியிருப்புகளையும் இடித்து மீண்டும் அப்பகுதியை புனரமைக்க நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற அனைவரும் அங்கிருந்து வெளியேறி சென்று விட்ட நிலையில், நிக் மட்டும் தொடர்ந்து அங்கே தனியாக வசித்து வருகிறார். இந்த இடத்தில் இருந்து வேறு இடம் செல்வதற்காக, நிக்கிற்கு, 35,000 பவுண்ட் மற்றும் வேறு இடத்திற்கு செல்லும் போது இரண்டு ஆண்டுகளுக்கான வாடகையும் கொடுக்க நிர்வாக முடிவு செய்துள்ளது.
ஆனால், அவர்கள் தருவதாக அறிவித்த 35,000 பவுண்டுகள் என்பது தனக்கு போதாது என்றும், அதனை 80,000 பவுண்டுகளாக உயர்த்தி தர வேண்டும் என்றும் கூறி, அங்கிருந்து வெளியேற நிக் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு இப்பகுதிக்கு குடியேறிய நிக், நல்ல தொகை கிடைக்கும் வரை அங்கிருந்து கிளம்ப மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார்.
சுற்றி 8 பிளாட்டுகள் உள்ள நிலையில், அனைவரும் சென்று விட்ட பிறகும், ஒரே ஒருவர் மட்டும் போகாமல் இருப்பது, அதனை இடித்து புதிய பணிகளை தொடங்க இருக்கும் நிர்வாகத்தினருக்கு சிக்கலாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசும் நிக், "டிசம்பரில் கடைசி நபரும் போய் விட்டார். இப்போது இது பேய் நகரம் போல உள்ளது. இங்கு தற்போது ஒரு நபர் வசிப்பது என்பது மிகவும் விசித்திரமாக உள்ளது. எனக்கு இது பழகி விட்டது. முன்பு இப்பகுதியில் 200 குடும்பங்கள் வரை இருந்தனர். அப்போது கார் பார்க்கிங் செய்வதே சிரமமாக இருந்தது. இப்போது நான் மட்டும் மீதம் உள்ளேன்" என நிக் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள குடியிருப்புகளில் ஏராளமான இடங்களில், கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து விட்டது. பல இடங்கள் சேதமாக இருப்பதாகவும் நிக் குறிப்பிட்டுள்ளார். அதிக பணம் கேட்டு, நிக் அங்கே இருந்து வெளியேற மறுக்கும் நிலையில், இங்குள்ள குடியிருப்புகளை இடிப்பதற்கான காரணம் சரி வர தெரியவில்லை.
ஆனால், அதே வேளையில், ஒரு தெருவில் தனியாக நபர் வசித்து வரும் சம்பவம், பலரையும் மிரள வைத்துள்ளது.