தாக்குதல் தீவிரமடைந்த நேரம்.. நைட் 12.30 மணிக்கு போன் செஞ்சு பிரதமர் சொன்ன விஷயம்.. வைரலாகும் அமைச்சர் பேசும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் தாக்குதலில் இருந்த நேரத்தில் கிடைத்த அனுபவம் பற்றி மனம் திறந்திருக்கிறார் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | சவூதி அரேபியாவுக்கு அடிச்ச அடுத்த ஜாக்பாட்.. இனி சொர்க்க பூமிதான்.. வெளியான திகைக்க வைக்கும் தகவல்கள்..!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் நியூயார்க் சென்றுள்ளார். அதன் ஒருபகுதியாக அவர் உலகெங்கிலும் உள்ள தூதர்கள் மற்றும் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துவருகிறார். அங்கே Modi@20: Dreams Meet Delivery எனும் புத்தகம் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி பேசும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போன் கால்
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அமைந்திருக்கும் மசார்-இ-ஷரீப் எனும் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்குதல் நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி, அப்போது வெளியுறவு செயலாளராக இருந்த ஜெயஷங்கருக்கு போன் செய்திருக்கிறார். அதுவும் நள்ளிரவு 12.30 மணிக்கு போன் செய்த பிரதமர் மோடி, "விழித்திருக்கீறீர்களா?" எனக் கேட்டதாக அமைச்சர் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அமைச்சர் பேசுகையில்,"அப்போது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப்பில் உள்ள எங்கள் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. என்ன நடந்தது என்று நாங்கள் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தோம். அப்போது என் தொலைபேசி ஒலித்தது. பிரதமர் அழைக்கும்போது உங்களுக்கு caller ID யில் அவர் பெயர் வராது. உங்களை யாராவது ஒருவர் அவருடன் இணைப்பார். அது பிரதமர் தான் என்று அறிந்தவுடன் நான் ஆச்சர்யப்பட்டேன். அவர் என்னிடம் விழித்திருக்கிறீர்களா? எனக் கேட்டார். நான் ஆமாம் என்றேன். டிவி பார்க்கிறீர்களா என்றார். நான் ஆமாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்" என்றார்.
உதவி
தாக்குதல் குறித்து பிரதமர் பேசியது பற்றி மனம்திறந்த அமைச்சர்," அப்போது மணி 12.30. விழித்திருப்பதை தவிர எனக்கு வேறு வேலையில்லை. எங்களுக்கு உதவி வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த பிரதமர் மோடி. ரகசிய திட்டம் முடிந்ததும் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும், அது முடிந்ததும் உங்கள் அலுவலகத்திற்கு (PMO) தெரிவிப்பேன் என்று கூறினேன்" என்றார். மேலும், பிரதமர் தன்னை அழைக்கவும் என தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் அமைச்சர் உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகையை அவசர சூழ்நிலையில், பிரதமர் பொறுப்புணர்வுடன் செயல்பட்டதாக புகழாரம் சூட்டிய அமைச்சர் ஜெய்ஷங்கர் கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் சிலாகித்து பேசினார். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#WATCH | NY, US: Recounting India's evacuation effort from Afghanistan, EAM Jaishankar says, "It was past midnight... PM called me, his first question was - "Jaage ho?"... I apprised him that help is on its way. He told me to call him when it's done... that's a singular quality." pic.twitter.com/AxL7Ddp6d6
— ANI (@ANI) September 23, 2022