வெற்றி கொண்டாட்டத்தில் தாக்கிய மர்ம நபர்.. கோமாவில் தென் ஆப்பிரிக்க இளம் வீரர்.. பரபரப்பில் கிரிக்கெட் உலகம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 01, 2022 05:46 PM

தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரரை மர்ம நபர் தாக்கியதில் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SA bowler Mondli Khumalo in serious condition after assault in UK

Also Read | “தோனி என்ன ப்ளேயிங் 11-ல இருந்து தூக்கிட்டாரு.. உடனே ரிட்டயர்ட் ஆகிடலாம்னு நெனச்சேன்”.. அப்போ சச்சின் சொன்ன அந்த அட்வைஸ்.. பல வருசம் கழிச்சு சேவாக் சொன்ன சீக்ரெட்..!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் 20 வயது இளம் கிரிக்கெட் வீரரான மாண்ட்லி குமாலோ. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவர் விளையாடியுள்ளார்.

இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் உள்ள ஹோட்டலில், சமீபத்தில் முடிந்த கிரிக்கெட் போட்டியில் தங்களது அணி வெற்றி பெற்றதற்கான கொண்டாட்டத்தில் மாண்ட்லி குமாலோ ஈடுபட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கு ஏற்பட்ட பிரச்சனையில், இவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மாண்ட்லி குமாலோ மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

SA bowler Mondli Khumalo in serious condition after assault in UK

இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாண்ட்லி குமாலோவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் ESPNcricinfo ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்பில் மாண்ட்லி குமாலோ விளையாடி வருகிறார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மொண்ட்லி விரைவாக குணமடைய நாங்கள் எங்கள் இதயபூர்வமான ஆதரவை வழங்குகிறோம். மொண்ட்லிக்கு உதவியவர்களுக்கு, குறிப்பாக சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் அவருக்கு உதவிய, உதவி வரும் சுகாதார ஊழியர்களுக்கு எங்கள் நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | முதல்ல IPS.. இப்போ IAS.. UPSC தேர்வில் கனவை வென்றெடுத்த இளம்பெண்.. குவியும் பாராட்டுகள்..!

Tags : #CRICKET #SOUTH AFRICAN CRICKETER #MONDLI KHUMALO #UK #தென் ஆப்பிரிக்க இளம் வீரர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. SA bowler Mondli Khumalo in serious condition after assault in UK | Sports News.