இந்த ஒற்றை புகைப்படம் எவ்ளோ பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிடுச்சு! அந்த போட்டோகிராபர் நல்லா இருக்கணும்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 22, 2022 12:31 PM

இத்தாலி: வைரலான ஒரு புகைப்படத்தால் சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இத்தாலிய அரசாங்கம் தானாக முன்வந்து தங்கள் நாட்டிற்கு அழைத்துள்ளது.

Italy calls Syrian refugee family by world viral photo

இன்றளவும் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சிரியா உள்நாட்டுப் போரின் போது இட்லிப்பில் உள்ள ஒரு பஜார் வழியாக நடந்து சென்ற அல்-நஸ்சல் தனது வலது காலை இழந்தார். அதுமட்டுமில்லாமல் இவரது மனைவி கர்ப்பமாக இருந்த போது அவரது பகுதியில் நடத்தப்பட்ட ஒரு இரசாயன தாக்குதலினால் அவரது மகன் முஸ்தபாவும் கைகால்கள் இல்லாமல் பிறந்துள்ளார்.

Italy calls Syrian refugee family by world viral photo

அகதிகள் முகாமில் போராட்ட வாழ்க்கை:

இதேபோல் எந்த தப்பும் செய்யாத அப்பாவி பொதுமக்கள் பலர் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதில் முன்சீர் அல்-நசால் குடும்பம் சிரியாவில் இருந்து வெளியேறிய பின்னர் சிறந்த வாழ்க்கைக்காக துருக்கியில் உள்ள ஹடேயில் அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தனர். ஆனால் அங்கும் அவர்கள் விரும்பிய வாழ்க்கைக்கு பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்துள்ளது.

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்யணும்.. வியாபாரிகள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

Italy calls Syrian refugee family by world viral photo

இந்நிலையில் தான், முன்சீர் அல்-நசால் குடும்பம் ஹடேயில் அகதிகள் இருந்த புகைப்படக் கலைஞர் மெஹ்மத் அஸ்லான் என்பவருடன் நட்பாகப் பழகியுள்ளனர். அவரால் தான் தற்போது முன்சீர் அல்-நசால் குடும்பம் உலகளவில் வைரலாகியுள்ளனர்.

கடந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்:

மெஹ்மத் அஸ்லான் தன்னுடைய கேமரா மூலம் அல்-நஸ்ஸல் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை புகைப்படம் எடுத்துள்ளார். அதோடு, அந்த புகைப்படங்கள் சியனா இன்டர்நேஷனல் ஃபோட்டோ விருதுகள் 2021 (SIPA) இல் இந்தப் படம் ஆண்டின் சிறந்த புகைப்படமாக முடிசூட்டப்பட்டது, மேலும் இது உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோரின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

Italy calls Syrian refugee family by world viral photo

மேலும், அல்-நசாலின் கதையை அறிந்த SIPA அமைப்பாளர்கள், செயற்கை உறுப்பு சிகிச்சையைப் பெறுவதற்கு குடும்பத்திற்கு உதவ உலகளாவிய நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களின் GoFundMe வலைப்பக்கத்தில் 1,800 நன்கொடைகளுடன் பிரச்சாரம் கிட்டத்தட்ட A$200,000 (€125,203) ஐ திரட்டியுள்ளனர். மேலும் இத்தாலிய அரசாங்கம் அவர்களின் குடும்பத்தை தங்கள் நாட்டிற்கு வரவேற்றுள்ளது.

லாட்டரி அடித்து கோடீஸ்வரர் ஆக.. புதுவிதமாக திட்டம் போட்ட நபர்.. பரிசு வென்றும் கடைசியில் காத்திருந்த ஆப்பு

புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நம்பிக்கையை தற்போது கொண்டுள்ளேன்:

இதுகுறித்து இத்தாலிய செய்தி நிறுவனமான லா ரிபப்ளிகாவிடம் பேசிய அல்-நஸ்ஸல், 'நான் துருக்கியில் இருந்ததால் நான் அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நம்பிக்கையை தற்போது கொண்டுள்ளேன். தனது குடும்பத்தை இங்கு அழைத்ததற்கு இத்தாலிய அரசாங்கம் மற்றும் SIPA நிறுவனர் லூகா வென்டூரிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும், எனது குழந்தைகளுக்கும் அவர்களின் கல்விக்கும் உதவிய இத்தாலிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

Italy calls Syrian refugee family by world viral photo

இத்தாலி எங்களுடைய புதிய தாயகம்:

மேலும் அந்த வீடியோவில் அல்-நஸ்சல் சிரித்துக்கொண்டிருக்கும் முஸ்தபாவைப் பிடித்துக் கொண்டு, 'நாங்கள் இத்தாலியை விரும்புகிறோம். இத்தாலி எங்களுடைய புதிய தாயகம்' என மனம் நெகிழ கூறியுள்ளார்.

Tags : #ITALY #SYRIAN REFUGEE FAMILY #இத்தாலி #சிரிய அகதி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Italy calls Syrian refugee family by world viral photo | World News.