பொங்கல் தொகுப்பு ஊழல் புகார்.‌. அதிகாரிகள்.. நிறுவனங்கள் மீது பாயப்போகும் கடும் ஆக்ஷ்ன்.. ஸ்டாலின் உத்தரவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 22, 2022 11:07 AM

சென்னை: பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் வைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

cm Stalin as action against erred in distribution Pongal package

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,297 கோடி மதிப்பில் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஜனவரி 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

cm Stalin as action against erred in distribution Pongal package

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு பொருட்களின் தரம் குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உள்பட எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை  கூறி வந்தனர் ‌. பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் நடந்ததாக தொடர்ந்து கடுமையாக குற்றச்சாட்டுகள் எதிர்கட்சி தரப்பில் எழுந்தன.

cm Stalin as action against erred in distribution Pongal package

பொங்கல் தொகுப்பு பொருட்கள் கொள்முதலில்  ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் குற்றச்சாட்டு தவறானது என்றும், இதுபற்றி நேரில் விவாதிக்கத் தயாரா என்றும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியிருந்தார். பொங்கல் பொருட்கள் கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.

cm Stalin as action against erred in distribution Pongal package

ஸ்டாலின் மீட்டிங்

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினர் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

cm Stalin as action against erred in distribution Pongal package

பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த ஆட்சிக்காலத்தில் 6 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21 பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன. மேலும்,தற்போது வழங்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவை கூடுதல் எடையில் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

cm Stalin as action against erred in distribution Pongal package

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நல்ல முறையில் நடந்திருந்த நிலையில், ஒருசில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் குறைபாடுகள் இருந்ததாக அரசுக்கு புகார்கள் வந்தன. அவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய தரத்துடன் பொருட்களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

cm Stalin as action against erred in distribution Pongal package

இதைத் தொடர்ந்து பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். மேலும், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

விரிவான ஆய்வுக்கு பிறகு முதல்வர் அறிவுறுத்தியதாவது: பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் வரக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுஅலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

தவறு செய்வோர் யாராகஇருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : #CM STALIN #DISTRIBUTION #PONGAL PACKAGE #பொங்கல் #தொகுப்பு #ஊழல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cm Stalin as action against erred in distribution Pongal package | Tamil Nadu News.