வெடித்த எரிமலை.. வெளியுலக தொடர்பில்லாமல் தவிக்கும் டோங்கோ தீவு.. உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 22, 2022 09:35 AM

டோங்கோ: பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவுகளில் ஒன்றான டோங்கோ தீவில் எரிமலைகள் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியது. இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

Elon Musk ready to provide internet to island of Tonga

எரிமலை வெடித்து சிதறியது:

டோங்கோ தீவின் தலைநகரில் இருந்து 64 கிமீ தொலைவில் இந்த எரிமலை காணப்படுவதால் டோங்கோ நாட்டிற்கு இது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியது. எரிமலை வெடித்து சிதறியதன் மூலம் ஏற்பட்ட அதிர்வு, பல கீமீ தொலைவில் உள்ள இந்தியாவில் சென்னை உட்பட பல நாடுகளில் உணரப்பட்டது.

Elon Musk ready to provide internet to island of Tonga

ஒருசில தீவுகளில் சுனாமியும் உருவானது. அந்த விடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. எரிமலை வெடிப்பிற்குப் பின்னர் டோங்கோ எவ்வளவு உக்கிரமாக பாதிக்கப்பட்டுள்ளது என சில செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

Elon Musk ready to provide internet to island of Tonga

மோசமான பாதிப்பு:

டோங்கோ நாட்டின் தலைநகர் உட்படப் பல தீவுகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தெளிவாக காட்டுகிறது. அந்நாட்டின் தலைநகரமான நுகுஅலோஃபா அடர்த்தியான பழுப்பு சாம்பலால் சூழ்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. எரிமலை வெடிப்பு ஏற்பட்ட தீவு கிட்டத்தட்ட முழுவதுமாக நீரில் மூழ்கி போயும் உள்ளது.

Elon Musk ready to provide internet to island of Tonga

எலான் மஸ்க் போட்ட ட்வீட்:

ஆகவே, அங்கு தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை முழுவதுமாக முடங்கி போயுள்ளது. இந்த நிலையில், தனக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் அங்கு இணைய சேவை வழங்கு முன்வந்துள்ளார் உலகின் மிகப்பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க். இதுபற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டார்லிங் திட்டத்தின் மூலம் இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்க வேண்டுமானால் டோங்கோ நாட்டு மக்கள் எங்களிடம் கூறலாம்" என ட்வீட் செய்துள்ளார்.

Elon Musk ready to provide internet to island of Tonga

ராட்சஷ எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட டோங்கோ நாட்டில் தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், நாடு முழுவதும் இணைய சேவையை தொடங்க குறைந்தபட்சம் ஒரு மாதம் வரையிலும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #ELON MUSK #INTERNET #ISLAND #TONGA #டோங்கோ #எலான் மஸ்க் #VOLCANO #எரிமலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon Musk ready to provide internet to island of Tonga | World News.