'ரொம்ப கோவக்காரர் போல...' 'மனைவி கூட பயங்கர சண்டை...' 'கோவத்தை தணிக்க கணவர் செய்த காரியம்...' - கடைசியில போலீசார் வைத்த ஆப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியை சேர்ந்த ஒருவர் கொரோனா ஊரடங்கை மீறி சுமார் 450 கி.மீ நடந்து சென்று ரூ.36,000 அபராதத்தையும் பெற்றுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இத்தாலி நாட்டில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் 48 வயதான கணவர் ஒருவர் தன் மனைவியிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
மேலும் சண்டையால் ஏற்பட்ட கோபத்தை கட்டுப்படுத்த வீட்டை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்துள்ளார். கோபம் குறையாமல் நடந்துக்கொண்டே இருந்ததால் சுமார் 450 கி.மீ தூரம் சென்றுள்ளார். கடைசியில் போலீசாரே அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
நடைபயணத்தை கேட்டறிந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து, ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக அவருக்கு ரூ.36,000 அபராதமும் விதித்தனர். மேலும் அவரின் மனைவி தன் கணவரை காணவில்லை எனவும் காவல்நிலையத்தில் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
