தங்க காரில் 1000 மைல் கடந்து.. காதலியை காண வந்த மல்டி மில்லியனர்!.. காரைப் பார்த்ததுமே போலீஸில் பிடித்துக் கொடுத்த காதலி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sivasankar K | Jan 08, 2021 11:40 PM

பிரிட்டன் மல்டி மில்லியனர் ஒருவர் இத்தாலிக்கு ஆயிரம் மைல்கள் பயணம் செய்து தனது காதலியை தேடி வந்தபோது காதலி அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

multi-millionaire arrested travels 1000 miles to threaten girlfriend

பிரிட்டன் பர்மிங்காம் நகரை சேர்ந்த மல்டி மில்லியனர் Ajaz Hussain Shah, 36 என்பவர் 165 ஆயிரம் டாலர் மதிப்புள்ள தங்க லம்போர்கினி ஹீரோக்கன் காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய 26 வயது காதலியை இத்தாலியின் மிலான் நகருக்கு வந்து பார்ப்பதற்காக பயணப்பட்டு உள்ளார். ஆனால் அவரது காரை, வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தவுடனேயே அவருடைய காதலி மகிழ்ச்சி அடையவில்லை.

ALSO READ: 'இவருக்கு வயசாகல!'.. மீண்டும் ஃபார்முக்கு வந்த ‘வீரர்’!.. கோலி, சச்சினின் சாதனையும் முறியடிப்பு!

மாறாக இத்தாலி போலீசாருக்கு உடனடியாக போன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டதோடு, உடனடியாக விரைந்து வருமாறும், Ajaz Hussain Shah-வை கைது செய்யுமாறும் கூறியுள்ளார். அவர் கூறியதை அடுத்து அவருடைய வீட்டுக்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண் சொன்னதுபோலவே அவருடைய காதலரான Ajaz Hussain Shah-வை கைது செய்தனர்.

multi-millionaire arrested travels 1000 miles to threaten girlfriend

விசாரித்து பார்த்ததில் ஆயிரம் மைல்கள் கடந்து இத்தாலியில் இருக்கும் தன்னுடைய காதலியை பார்ப்பதற்காக  Ajaz Hussain Shah வந்துள்ள காரணம் தெரிய வந்தது. கடந்த 18 மாதங்களாக Ajaz Hussain Shah மற்றும் அவருடைய காதலி இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இடைப்பட்ட காலங்களில் தன்னுடைய காதலியை அடித்து துன்புறுத்துவது, திட்டுவது, சூடு வைப்பது உள்ளிட்ட குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டு இருக்கிறார்  Ajaz Hussain Shah. 

இப்பேற்ப்பட்டவரிடம் இருக்க முடியாது என்று எப்படியோ அவரிடமிருந்து தப்பித்து இத்தாலியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அவருடைய காதலி ஓடி வந்துள்ளார். அதற்குப் பிறகும் விடாத Ajaz Hussain Shah காதலியை போனில் அழைத்து, அவருடைய பெற்றோரின் வீட்டையும் காரையும் எரித்து விடுவேன் என்று எச்சரித்தும் மிரட்டியும் வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் தன் வீட்டை எப்படியோ கண்டுபிடித்து வந்த Ajaz Hussain Shah-ன் காரை பார்த்ததும் மிரண்டு போன காதலி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக உடனடியாக போலீசாருக்கு அழைத்து விவரத்தை சொல்லியுள்ளார். இதனையடுத்து இத்தாலி போலீசார் Ajaz Hussain Shah மீது அச்சுறுத்தல் மற்றும் வன்முறையை கையாண்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ: 'இனி இப்படியும் டெலிவர் பண்ணுவோம்!'.. ‘தெறிக்கவிடும்’ புதுமுயற்சியில் களமிறங்கிய ‘அமேசான்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனம்!

மேலும் இத்தாலி நிறுவன பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது. பிரிட்டனில் நிதி நிறுவனத்தை நிர்வகிக்கும் Ajaz Hussain Shah என்பவர் சுமார் 15 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உட்பட சொத்துக்களை சொந்தமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Multi-millionaire arrested travels 1000 miles to threaten girlfriend | World News.