'பேக்ரவுண்ட்ல வயலின் இசை...' 'பால்கனியில நின்னு பார்த்த அடுத்த செகண்டே லவ் பத்திக்கிச்சு...' - லவ் ப்ரபோஸ் பண்ணினது தான் வாவ் சர்ப்ரைஸ்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் ரோமியோ - ஜூலியட் கதை நடந்த இடமான வெரோனாவில் வசிக்கும் காதல் ஜோடி தற்போது இணையதளங்களில் பிரபலமாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் ஊரடங்கினால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.
இந்த நிலையில் இத்தாலியில் மைக்கேல் டி அல்பாஸ் என்பவர் வசித்த அபார்ட்மெண்ட்டில் வயலின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைவரும் பால்கனிகளில் இருந்தபடியே வயலின் கச்சேரியை ரசிக்க, வயலின் வாசித்த பெண்ணின் அக்காவான பாலோ அக்னெல்லி மைக்கேலை வெகுவாக கவர்ந்துள்ளார். பார்த்தவுடன் இருவருக்கும் காதல் உணர்வு பற்றிக் கொள்ள இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்தனர்.
அளவில்லாத காதலால் பாலோவின் பெயரை ஒரு துணியில் தானே வரைந்து தன் குடியிருப்பின் உச்சியில் மைக்கேல் பறக்கவிட, இத்தாலியே இவர்களை நவீன ரோமியோ - ஜூலியட் என அழைக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக சந்தித்த இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
