கொரோனாவுக்கே 'ஷாக்' வைக்கும் 'மாஸ்க்...' 'வைரஸ்' பாதுகாப்பில் புதிய 'மைல் கல்...' 'இஸ்ரேல்' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...'
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்ரேல் விஞ்ஞானிகள் ரீசார்ஜ் செய்து பலமுறை பயன்படும் மாஸ்க் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். மொபையில் போன் சார்ஜர் மூலம் இந்த மாஸ்க்கை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பெரும் சவாலாக இருக்கும் இந்த சூழலில், மாஸ்க்குகள் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொல்ல பெரும் உதவியாக இருக்கிறது.
அப்படிப்பட்ட மாஸ்கில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் விஞ்ஞானிகள். இந்த புதிய மாஸ்கை அணிந்துகொண்டு வெளியே சென்று வந்த பிறகு கழற்றி சார்ஜ் செய்தால் போதும். 30 நிமிட கால அவகாசத்தில் கொரோனா உள்பட எந்த கிருமி அதில் படிந்து இருந்தாலும் மின்சாரம் அதைக் கொன்றுவிடும்.
இப்படி மாஸ்க்கை ரீசார்ஜ் செய்யும்போது அதை முகத்தில் அணியக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த நவீன மாஸ்க்கை இஸ்ரேல் ஹாய்ஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த மாஸ்க்கை நாம் ரீசார்ஜ் செய்யும்போது, அதன் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கார்பன் ஃபைபர் இலைகள் 70 டிகிரியில் சூடாகிறது. இந்த வெப்பநிலை அனைத்து வகை வைரஸ்களையும் கொன்றுவிடும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மாஸ்க்களை ஒருமுறை பணம் கொடுத்து வாங்கினாலே போதும், தூக்கி எரிய வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி சுற்றுச்சூழலுக்கும் நன்மை அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ள மாஸ்க் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. இந்த மாஸ்க்குகள் ஏறத்தாழ என்95 மாஸ்க்குகளை போல்தான் உள்ளது.