'தம்மாத்துண்டு மாஸ்க்... சும்மா நினைக்காதீங்க!'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மட்டும் முகக் கவசம் அணியாமல் வெளியே திரிந்தவர்களிடம் இருந்து ரூ. 2 கோடியே 10 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 6வது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் முகக் கவசத்துடன் வெளியே செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாமல் வெளியே சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடமிருந்து இதுவரை ரூ.2 கோடியே 10 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
