'காற்றில் உலவும் கொரோன மூலக்கூறு...' 'அவைதான் கொரோனா வேகமாக பரவ காரணமா?...' 'பீதியை கிளப்பும் சீன விஞ்ஞானிகள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 29, 2020 07:34 AM

காற்றில், கொரோனா வைரஸ் மூலக்கூறுகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

In the air, corona virus molecules are present-Chinese scientists

சீனாவில், விஞ்ஞானி, கி லன் தலைமையிலான குழுவினர், கடந்த, ஃபிப்ரவரி-மார்ச் ஆகிய மாதங்களில், 31 இடங்களில் காற்றில் உள்ள கிருமிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கையை, 'ஜர்னல் நேச்சர்' இதழ் வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள மருத்துவமனைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காற்றில், கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவைதான் கொரோனா வைரஸ் பரவ காரணமா என்பதை உறுதிப்படுத்த, மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காற்றோட்டமுள்ள நோயாளிகளின் அறைகளில், இந்த மூலக்கூறு அணுவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்பட்டது என்றும், அதேசமயம், குளிர்சாதன அறை, கழிப்பறை போன்ற வெளிக்காற்று வசதியற்ற இடங்களில், அடர்த்தி அதிகமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனைக்குள்ளும், வெளியிலும், அதிகமானோர் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொரோனா மூலக்கூறு அணு அதிகம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பாதுகாப்பு ஆடைகளை அகற்றி, வேறு உடைகளை அணியும் அறைகளிலும், கொரோனா மூலக்கூறு அணுவின் அடர்த்தி அதிகமாக காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இவை தவிர கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பகுதிகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில், கொரோனா மூலக்கூறு அணு குறைவாகவே இருந்ததாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.