'மாஸ்க் ஏன் போடலன்னு தானே கேட்டோம்'... 'உடனே ஜீன்ஸை கழட்டி இளம் பெண் செஞ்ச பகீர் செயல்'... 'ஆடிப்போன ஊழியர்கள்'... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்மாஸ்க் ஏன் போடவில்லை என ஊழியர்கள் கேட்டதற்குப் பெண் ஒருவர் தனது உள்ளாடையைக் கழற்றி மாஸ்க்காக அணிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் மாஸ்க் அணியாமல் தபால் நிலையம் வந்த பெண், மாஸ்க் அணியச் சொன்னதற்காக அவர் நடந்து கொண்ட விதம் கடும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தபால் நிலையத்திற்கு வந்த அந்த பெண் அங்குள்ள ஊழியர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது அந்த ஊழியர் ஏன் மாஸ்க் போடவில்லை என அவரிடம் கேட்கிறார். அப்போது அந்த பெண் பதிலுக்கு ஏதோ பேசிவிட்டு, உடனே தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை கழற்றுகிறார். சற்று நேரத்தில் யாரும் எதிர்பாராத நிலையில், தனது உள்ளாடையைக் கழற்றி மாஸ்க் போல அணிந்து கொள்கிறார். அதன் பின்பு மீண்டும் தனது பேண்டை போட்டுக் கொள்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அந்த பெண்ணின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சிசிடிவி காட்சிகளைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட தபால் நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Woman in Ukraine strips off in front of customers, takes off knickers and uses them as face mask so she can get served under coronavirus rules.
— Odd, Weird, Bizarre, Strange, Offbeat News (@oddweirdbizarre) May 27, 2020
https://t.co/3iNg1gzqHY pic.twitter.com/yxyz11SUIl

மற்ற செய்திகள்
