கொரோனா 'ஆன்டிபாடியை' உருவாக்கியுள்ளோம்... 'இதை' வைத்து வைரஸை 'அழிக்க' முடியம்... அறிவித்துள்ள 'நாடு'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 05, 2020 07:06 PM

இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Israel Claims To Develop Antibody For Coronavirus Treatment

இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில்  கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது கொரோனா சிகிச்சையை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் கூறியுள்ளார். நேற்று அமைச்சர் நப்தாலி பென்னட் பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு சென்றபோது, அங்கு அவருக்கு இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்காக ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டிய பென்னட், நிறுவன ஊழியர்களைப் நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவருடைய அறிக்கையில், "இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (ஐ.ஐ.பி.ஆர்) உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடியால் நோயாளியின் உடலிலுள்ள கொரோனா வைரஸை அழிக்க முடியும். ஆன்டிபாடி செய்முறை காப்புரிமை பெறுகிறது என ஐ.ஐ.பி.ஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா கூறியுள்ளார். அதன் பிறகு சர்வதேச உற்பத்தியாளர்கள் அதை பெருமளவில் உற்பத்தி செய்ய முற்படுவார்கள்" எனக் கூறியுள்ளார். இதுவரை இஸ்ரேலில் கொரோனாவால் 16,246 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 235 உயிரிழந்துள்ளனர்.