'டோன்ட் ஒரி, மாஸ்க் போட்டாலும் யாருன்னு தெரிஞ்சிரும்'... 'மாஸ்க்கை மாஸாக மாற்றிய கேரள கலைஞர்'... குவியும் ஆர்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள மாஸ்க் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த மாஸ்க்கிற்கு தற்போது ஆர்டர் குவித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதனோடு நாமும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற குரல்களும் அங்கங்கே கேட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்படுத்த பின்பும் நிலைமை எப்படி இருக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கேரளாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் வித்தியாசமான மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். மாஸ்க்கிலேயே முகத்தின் பாதியை பிரிண்ட் செய்து புதிய வடிவிலான மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் யார் மாஸ்க் அணிந்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.
இந்த மாஸ்க்கை உருவாக்கிய பினுஸ் ஜிபால் கூறுகையில், ''என்னுடைய புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கோட்டயம் பகுதியில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்துள்ள எனக்கு, இந்த மாஸ்க்கை செய்ய 20 நிமிடங்கள் போதும். இதன் விலை 60 ரூபாய் எனத் தெரிவித்துள்ள அவர், தற்போது வரை 5000 மாஸ்க்குகளுக்கு ஆர்டர் வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
