என் மனசுக்கு புடிச்சவரே இப்போ இல்ல... எனக்கும் 'வேற' வழி தெரியல... கடைசியா 'டிக் டாக்' வீடியோ... பின் இளம்பெண் எடுத்த 'பரிதாப' முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jun 17, 2020 07:10 PM

அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் அமைந்துள்ள போர்க்குரா என்னும் பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் அருகே ஓடும் ரெயில் முன் குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

Girl makes Tiktok video minutes before Suicide

அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது பெற்றோர்களுக்கு வேண்டி டிக் டாக் வீடியோ ஒன்றை  எடுத்துள்ளார். அந்த வீடியோவில், 'நான் அதிகம் நேசித்த நபர் விட்டு சென்று விட்டார். ரெயிலுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். எனது நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விடைபெறுகிறேன். நான் இறக்க விரும்பவில்லை. ஆனால் என்னிடம் வேறு வழியில்லை. லவ் யூ அம்மா, லவ் யூ அப்பா, தயவு செய்து நன்றாக வாழக்கையை வாழுங்கள். அதே நேரத்தில் எனது சகோதரனையும் சிறந்த முறையில் கவனித்து கொள்ளுங்கள்' என அந்த டிக் டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் இளம்பெண் குறிப்பிட்ட இளைஞரும் ஒரு நாள் முன்னதாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடம் வந்த போலீசார் இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Girl makes Tiktok video minutes before Suicide | India News.