'கொரோனாவுக்கு' 5 பவுண்ட் செலவில் 'மருந்து...' 'பிரிட்டன்' விஞ்ஞானிகள் 'கண்டுபிடிப்பு...' இறப்பு விகிதம் '5ல் ஒரு பங்காக' குறைவதாக 'அறிவிப்பு...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 5 பவுண்ட் செலவில் கிடைக்கும் இந்த மருந்து இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் 5 பவுண்ட் செலவில் அதாவது இந்திய மதிப்பில் 500 ரூபாய் செலவில் கொரோனாவுக்கான மருந்தினை அந்நாட்டு தேசிய சுகாதார சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
சாதாரண ஸ்டிராய்டு வகை மருந்தாகிய 'டெக்சாமிதாசோன்' கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் கொடுப்பதாக அறியப்பட்டுள்ளது. இது ஆபத்தான கட்டத்தை எட்டிய நோயாளிகளை காப்பாற்றுவதாக கூறப்படுகிறது.
இது கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
'டெக்ஸசமிதாசோன்' எனப்படும் இந்த மருந்து சாதாரணமாக மூட்டுவலிக்கும், அலர்ஜிக்கும் பயன்படுத்தக் கூடியது. ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் இம்மருந்தினை கொரோனா நோயாளிகளிடம் சோதித்து பார்த்ததில், வெண்டிலேட்டரில் சிகிச்சை பெறுபவர்களில் 8 ல் 3 பேர் உயிரிழந்த நிலையில் இம்மருந்தின் பயன்பாட்டிற்கு பிறகு 2 பேர் மட்டுமே உயிரிழந்ததை கண்டுபிடித்தனர். இம்மருந்து ஊசியாக செலுத்தப்படும் போதும் இறப்பு விகிதம் 5ல் ஒரு பங்காக குறைந்தது.
இம்மருந்து ஆரம்பித்திலேயே பயன்படுத்தப்பட்டிருந்தால் 5000 நோயாளிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என பிரிட்டன் அரசு அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்தமருந்து மூலம் கொரோனா நோயாளிகளை பிரிட்டனில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் காப்பாற்ற முடியும் என்றும், வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாக உள்ளது என்றும் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அதிகாரி ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
