'மாஸா இருக்கா?.. ''மாஸ்க் மட்டும் இல்ல.. 'இவங்க கொரோனவ டீல் பண்ணிய விதமும் மாஸ்தான்'.. 'பாதித்தோர் எண்ணிக்கையும்.. குணமானோர் எண்ணிக்கையும்.. நீங்களே பாருங்க!'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 20, 2020 10:44 PM

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பின்னர், ஆசிய நாடுகளுக்கு புயலைப் போல யூ-டர்ன் அடித்தது என்றே சொல்லலாம்.

South Korea Cured more Covid19 Cases and student masks goes viral

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 49 லட்சத்தைத் தாண்டியும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3  லட்சத்து 24 ஆயிரமாகவும் உள்ள நிலையில், கொரோனா பரவலுக்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் ஒருபுறம் உலகநாடுகள் இயங்கி வருகின்றன. இன்னொருபுறம் அதே உலகநாடுகள், பரவிவரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான தடுப்பு முறைகளை வலியுறுத்தியும் அமல்படுத்தியும் வந்தன.

அதன் முக்கிய அம்சங்களாக மாஸ்க் அணிதல், தனிமைப்படுத்துதல், ஊரடங்கு, பொதுமுடக்கம், போக்குவரத்து முடக்கம், கட்டுப்பாட்டு பகுதிகளை பிரித்து சீல் வைத்தல், கண்காணிப்பு வளையங்களுக்கு கொண்டுவருதல் உள்ளிட்டவை இருந்துவந்த நிலையில், தற்போது உலக நாடுகளின் பொருளாதாரம், கல்வி, வணிகம் முதலான தேசிய அம்சங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டே, கொரோனாவை எதிர்த்துக் கொண்டே அதே சமயம் அன்றாட வாழ்க்கையையும் வாழத் தொடங்குவதற்கு உலக நாடுகள் தயாரானதுடன் ஊரடங்குகளையும், கட்டுப்பாடுகளையும் தளர்த்தத் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக தென் கொரியாவில் தற்போது விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டதோடு, கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மாஸ்க் அணிந்தபடி மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதேபோல் கல்வி நிறுவனங்களிலும் ஒருவரை ஒருவரிடம் இருந்து தனிமைப்படுத்தும் விதமாக பெரிய அளவிலான மாஸ்க் அவர்களின் இருக்கைகளில் போடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

தென் கொரியாவில் இதுவரை, 11 ஆயிரத்து110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 263 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். குணமானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 66 பேராக உள்ளனர். கிட்டத்தட்ட பாதிக்கப்பட்டவர்களுள் 263 பேரை மட்டுமே தென் கொரியாவால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது என்பது கொரோனாவை தென்கொரியா எந்த அளவுக்கு கட்டுப்படுத்த முனைந்துள்ளது என்பதற்கான் சான்று.