Naane Varuven D Logo Top

"இத யாருமே எதிர்பார்க்கல".. கால்பந்து போட்டிக்கு நடுவே அரங்கேறிய அசம்பாவிதம்.. நூறைத் தாண்டிய பலி எண்ணிக்கை!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Oct 02, 2022 01:12 PM

கால்பந்து போட்டிக்கு மத்தியில் நடந்த சம்பவம் காரணமாக, சுமார் 129 பேர் வரை பலியான விஷயம், உலக அளவில் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

Indonesia stampede at football match after the results

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதில், உள்ளூர் அணிகளான Arema FC மற்றும் Persebaya Surabaya ஆகிய அணிகளுக்கு இடையே நேற்றிரவு கால்பந்து போட்டி நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த போட்டியைக் காண ஏராளமான ரசிகர்களும் மைதானத்தில் கூடி இருந்தனர். இரு அணியின் ரசிகர்களும் போட்டியை மிகவும் உற்சாகத்துடன் தங்கள் அணிக்கு ஆதரவை அளித்து கண்டு களித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த போட்டியில், Persebaya Surabaya அணி வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Indonesia stampede at football match after the results

இதனால், மைதானத்தில் இருந்த Arema FC ரசிகர்கள் ஆக்ரோஷம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அங்கிருந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் இறங்கி ரகளையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், பதற்றம் அடைந்த அனைவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றதன் காரணமாக, அங்கே கூட்ட நெரிசலும் உருவாகி உள்ளது.

இதன் பெயரில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர், களத்தில் இறங்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த வன்முறையின் காரணமாக, சுமார் 150 பேருக்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், 180 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Indonesia stampede at football match after the results

கால்பந்து போட்டிக்கு நடுவே யாரும் எதிர்பாராத வகையில் நடந்த சம்பவத்தால், 129 பேர் வரை உயிரிழந்த சம்பவம், இந்தோனேசியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டு பண்ணி உள்ளது. மேலும், எஞ்சிய போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் பற்றி பேசிய இந்தோனேசிய விளையாட்டுதுறை அமைச்சர் ஜைனுடின் அமலி, "இது நமது கால்பந்து விளையாட்டைக் காயப்படுத்தும் ஒரு வருந்தத்தக்க சம்பவம். இதற்காக நாங்கள் வருந்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags : #INDONESIA #FOOTBALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indonesia stampede at football match after the results | World News.