RRR Others USA

முக்கியமான மேட்ச்ல மாரடோனா போட்ருந்த டிஷர்ட் ஏலம்..ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Apr 07, 2022 02:49 PM

கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா அணிந்திருந்த டிஷர்ட் ஒன்று விரைவில் ஏலத்திற்கு வர இருக்கிறது. இந்த டிஷர்ட் குறைந்தபட்சம் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maradona Hand of God jersey to be auctioned

ஒரே நேரத்துல 9 மனைவிகளுடன் வசித்த ரெமோ.. திடீர்னு அந்நியனா மாறிய ஒரு மனைவி..

மாரடோனா

அர்ஜென்டினா நாட்டில் பிறந்த டியாகோ அர்மெண்டோ மரடோனா கால்பந்து உலகின் கடவுளாக கருதப்படுகிறார். கால்பந்தாட்டத்தில் இவருடைய சாதனைகள் மகத்தானவை. களத்தில் ஓயாமல் ஓடி தன்னுடைய நாட்டு அணி வெற்றிக்காக போராடிய இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், உலக புகழ்பெற்ற Hand of God மற்றும் goal of the century ஆகிய இரு கோல்களை அடித்தபோது மாரடோனா அணிந்திருந்த டிஷர்ட் தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது.

Maradona Hand of God jersey to be auctioned

2 கோல்கள்

1986 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியும் இங்கிலாந்து அணியும் களம் கண்டன. இந்தப் போட்டியில் மாரடோனா அடித்த இரண்டு கோல்களும் உலக பிரசித்தி பெற்றவை. அந்த ஆட்டத்தில் 2-1 என அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.

Maradona Hand of God jersey to be auctioned

ஏலம்

இந்நிலையில் அந்த ஆட்டத்தின் போது  மாரடோனா அணிந்திருந்த டிஷர்ட் தற்போது ஏலத்திற்கு வரவிருக்கிறது. புகழ்பெற்ற ஏல நிறுவனமான Sotheby இந்த விற்பனையை நடத்த இருக்கிறது. இதுகுறித்து பேசிய இந்நிறுவனத்தின் பழங்கால பொருட்கள் சேகரிப்பு பிரிவின் தலைவர் பிராம் வாட்ச்சர்,'' விளையாட்டு உலகின் மிக முக்கியமான நினைவுப் பொருள் மாரடோனா ஜெர்சி. அவர் கோல் அடித்த நிமிடம், விளையாட்டு வரலாற்றில் சிறந்த தருணம். இதுபோன்ற ஒரு பொருளை நான் இனி ஒருபோதும் கையாள முடியாது,'' என்றார்.

இந்த ஏலம் ஏப்ரல் 20 ஆம் தேதி துவங்கி மே மாதம் 4 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த ஏலத்தில் மாரடோனா பயன்படுத்திய டிஷர்ட் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் 39.49 கோடி) அதிகமாக விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maradona Hand of God jersey to be auctioned

கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் மாரடோனாவின் புகழ்பெற்ற டிஷர்ட் ஏலத்திற்கு வருவது அவரது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது.

அப்பாடா... கூகுள் Map ல வரவிருக்கும் புது ஆப்ஷன்.. இனி டிராவல் இன்னும் ஈஸியா இருக்கும்..

Tags : #FOOTBALL #MARADONA #HAND OF GOD JERSEY #MARADONA HAND OF GOD JERSEY #AUCTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maradona Hand of God jersey to be auctioned | Sports News.