19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்.. இரண்டே மாதத்தில் நடந்த பரபரப்பு 'ட்விஸ்ட்'.. வெளியான அதிர்ச்சி தகவல்
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவில் 65 வயதான கோடீஸ்வரர் ஒருவர், 19 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தற்போது அவர்கள் எடுத்துள்ள முடிவு தொடர்பாக வெளி வந்துள்ள தகவல், சற்று பரபரப்பை கிளப்பி உள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்தவர் ஹாஜி சொண்டனி (Haji Sondani). 65 வயதாகும் இவர், கடந்த மே மாதம் 18 ஆம் தேதியன்று, 19 வயதாகும் இளம் பெண் ஃபியா பர்லண்டி (Fia Barlanti) என்பவரை திருமணம் செய்திருந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம், அந்த சமயத்தில் மிக பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.
அது மட்டுமில்லாமல், மிகப் பெரிய கோடீஸ்வரரான ஹாஜி, தனது இளம் மனைவி ஃபியாவுக்கு இந்திய மதிப்பில் பல லட்சம் ரூபாய் கொடுத்ததுடன் மட்டுமில்லாமல், புதிய வீடு மற்றும் கார் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகி, இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
அதே போல, திருமண செலவுகள் முழுமையாகவும் ஹாஜி தான் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு பின்னர் மெக்காவுக்கும் அவர்கள் குடும்பமாக சென்றிருந்த நிலையில், அதன் மொத்த செலவைக் கூட, ஹாஜி தான் ஏற்றிருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில், ஹாஜி மற்றும் ஃபியா குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருவருக்கும் திருமணமாகி, இரண்டு மாதங்களுக்கு மேல் மட்டுமே ஆன நிலையில், தற்போது அவர்கள் பிரிய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக திருமணமாகி இரண்டு வாரங்கள் ஆனதில் இருந்தே ஹாஜி மற்றும் ஃபியா இடையே ஒரு பிணைப்பு இல்லாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், கணவர் ஹாஜி மீது ஃபியாவுக்கு ஒருவித வெறுப்பு உருவானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இப்படி அவர்கள் முடிவை எடுத்துக் கொண்டதற்கான காரணங்கள் எதுவும் சரி வர தெரியவில்லை. அதே போல, மனைவி பிரிந்து சென்ற பின்னர், ஹாஜியின் உடல்நிலையும் சரி இல்லாமல் இருப்பதாக அவரது நண்பர் ஒரு கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இரண்டு மாதங்களுக்கு முன், 65 வயது முதியவர் ஒருவர், 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த விஷயம், அதிகம் வைரலாகி இருந்த நிலையில், தற்போது அவர்கள் பிரிந்ததாக வெளி வந்துள்ள தகவல் குறித்து, நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
