Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

"இது என்னங்க அதிசயம்?".. சஞ்சய் பற்றி ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. பதிலுக்கு சஞ்சய் சொன்ன வைரல் பதில்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Sep 30, 2022 11:26 PM

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்த ரவீந்திர ஜடேஜா, காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் இடம்பெறவில்லை.

ravindra jadeja and sanjay manjrekar friendship tweets gone viral

மேலும், தனது காயத்திற்காக ஜடேஜா சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் டி 20 உலக கோப்பை தொடரிலும் அவர் இல்லாமல் போனது, இந்திய அணிக்கு பெரிய சிக்கலாகவே அமைந்துள்ளது.

இந்த நிலையில், வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பற்றி ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த ட்வீட்டும், பதிலுக்கு சஞ்சய் தெரிவித்துள்ள கருத்தும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோரின் பெயர்களை இணைத்துக் கேட்டாலே, இருவருக்கும் இடையே மறைமுகமாக இருக்கும் பனிப்போர் தான் பலருக்கும் நினைவு வரும். தற்போது நம்பர் 1 ஆல் ரவுண்டராக வலம் வரும் ஜடேஜா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் கண்டார். அந்த சமயத்தில், ஜடேஜா தொடர்பாக வர்ணனையில் இருக்கும் சஞ்சய், நிறைய விமர்சன கருத்துக்களை முன் வைத்து வந்தார்.

ravindra jadeja and sanjay manjrekar friendship tweets gone viral

மேலும், தன் மீதான விமர்சனங்களுக்கு மறைமுகமாகவும் பதிலடி கொடுத்து வந்தார் ஜடேஜா. இப்படி மாறி மாறி, ஜடேஜா மற்றும் சஞ்சய் ஆகியோருக்கு இடையே ஒருவிதமான விமர்சன தாக்குதல்கள் என்ற சூழ்நிலை தான் இருந்து வந்தது. இதன் பின்னர், சில சிறந்த இன்னிங்ஸ்கள் ஆடி ஃபார்முக்கு வந்த ஜடேஜா, நேரடியாகவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

ravindra jadeja and sanjay manjrekar friendship tweets gone viral

அப்படி இருக்கையில், சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர், "என்னிடம் கோபம் இல்லையே, என்னுடன் பேசுவீர்களா?" என பேட்டி எடுக்கும் போது ஜடேஜாவிடம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த ஜடேஜா எந்த கோபமும் இல்லை, கண்டிப்பாக பேசுவேன் என்றும் குறிப்பிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், சஞ்சய் பற்றி ட்வீட் ஒன்றை ரவீந்திர ஜடேஜா செய்துள்ளார். முன்னாள் வீரர்களை வைத்து தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில், தொகுப்பாளராக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பணியாற்றி வருகிறார்.இதனை டிவியில் கண்டு கொண்டிருந்த ஜடேஜா, தொலைக்காட்சியில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தோன்றுவதை ஒரு புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து, "என்னுடைய அன்பான நண்பரை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ravindra jadeja and sanjay manjrekar friendship tweets gone viral

இதனைத் தொடர்ந்து, ஜடேஜாவின் பதிவை கவனித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "ஹாஹா, உங்களின் அன்பான நண்பன் நீங்கள் விரைவில் களமிறங்கி விளையாடுவதை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.

ravindra jadeja and sanjay manjrekar friendship tweets gone viral

எதிர் திசையில் இயங்கும் ஜடேஜா மற்றும் சஞ்சய் ஆகியோர் தற்போது நட்பு பாராட்டி இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Tags : #RAVINDRA JADEJA #SANJAY MANJREKAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravindra jadeja and sanjay manjrekar friendship tweets gone viral | Sports News.