'அந்த பொண்ணு இறந்து 7,200 வருஷம் ஆச்சு'... 'ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு'... 'பதறிப்போன ஆராய்ச்சியாளர்கள்'... ஒரு வேளை அமானுஷ்யமா?
முகப்பு > செய்திகள் > உலகம்7200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண் குறித்து வெளிவந்துள்ள தகவல் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்கள். தெற்கு சுலாவேசி பகுதியில் வசித்து வந்த மக்களை டோலியன் மக்கள் என அழைத்து வந்தார்கள். இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் சுண்ணாம்பு குகை அருகே 17 அல்லது 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் மரபணுவைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த பெண் 7200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த பெண்ணின் சடலத்தில் வயிற்றில் ஒரு குழந்தை படுத்திருப்பது போன்று இருப்பதால் அப்பெண் கர்ப்பமாக இருக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெஸ்கி என அந்த பெண்ணிற்கு ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ள நிலையில், உலகத்தில் வேறு இடத்தில் கிடைக்கப்படாத பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மரபணு கண்டறியப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் சடலங்களை மண்ணில் புதைக்கும் போது அதனின் ஈரப்பதம், வெப்ப மாற்று நிலை போன்றவற்றால் DNA அழிந்துவிடும். ஆனால் சுமார் 7200 ஆண்டுக்கு பிறகும் இந்த பெண்ணின் மரபணு அழியாமல் இருப்பது தான் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.
சுலாவேசி பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், ''உலகின் பிற இடங்களில் - ஐரோப்பாவின் வடக்கு பகுதி, அமெரிக்காவின் பண்டைய டிஎன்ஏ பகுப்பாய்வு மற்றும் ஆரம்பக்கால மனித கதையைப் பற்றிய நமது புரிதலை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது இந்த ஆய்வு முடிவுகள். அந்த பெண்ணின் சடலத்தில் டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டதை முதலில் எங்களால் கூட நம்ப முடியவில்லை.
முதலில் அது அமானுஷ்யமாகக் கூட இருக்கலாம் என வேடிக்கையாக கூறிக் கொண்டோம். ஆனால் இது தொல்பொருள் ஆய்வில் முக்கியமான ஒரு திருப்புமுனை'' எனத் தெரிவித்துள்ளார்.