VIDEO: '13 வயசுல இருந்து இங்க விளையாடுறேன்!.. இனிமே அது இல்லனு நினைக்கும் போது'... தேம்பி தேம்பி அழுத கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸி விடைபெறும் காட்சிகள் ரசிகர்களை கலங்கடிக்கச்செய்துள்ளது.

13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் இணைந்த மெஸ்ஸி அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார்.
மெஸ்ஸிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை.
வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மெஸ்ஸி கண்ணீருடன் தெரிவித்தார்.
அதையடுத்து, கூடியிருந்த சக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி மெஸ்ஸிக்கு பிரியாவிடை அளித்தனர்.
Greatest Applause
Of
All
Time pic.twitter.com/YoJt8nkTZc
— FC Barcelona (@FCBarcelona) August 8, 2021

மற்ற செய்திகள்
